பணக்கார டைமண்ட்
16 கேரட் வைரம் $28.5 மில்லியனுக்கு ஏலம் போனதாம்; ஒரு கேரட் என்பது எடை கணக்கில் 200 மில்லிகிராம். அப்படியென்றால் 5 கேரட் என்பது எடையில் ஒரு கிராம்.
பளிச்சென்ற பிங்க் கலரில் உள்ள இந்த 16 கேரட் வைரம்தான் உலகிலேயே மிக அதிகமான விலைக்கு ஏலம் போயிருக்கிறது; ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்; 28.5 மில்லியன் என்பது 285 லட்சம்; அல்லது 2.85 கோடி டாலர்; ஒரு டாலர் 65ரூபாய். இந்தியப்பணத்துக்கு சுமார் 185 கோடி ரூபாய்கள்; 250 வருட ஏல வரலாற்றில், இதுதான் உலகிலேயே மிக அதிக ஏலத்தொகையாம்;
இதை ஏலம் எடுத்த Hong Kong காரர், இந்த பிங்க் டைமண்டுக்கு “ஸ்வீட் ஜோஸபைன்” என்று பெயரும் வைத்திருக்கிறார். “Sweet Josephine.”
இதை பிளாட்டினம் மோதிரத்தில் பதித்து வைத்து, அதைச் சுற்றிலும் வெள்ளை வைரங்களை இரண்டு அடுக்காக பார்டர் கட்டி வைத்துள்ளார்கள்; பார்ப்பதற்கே மிக அழகாக உள்ளது;
பிங்க் டைமண்டுகளில் சில, கலர் மாறி மாறி இருக்குமாம்; பர்ப்பிள், ஆரஞ்ச், ப்ரௌன், கிரே; மதிப்பு குறைவான டைமண்டுகளில் இந்த கலர்களில் இரண்டு சேர்ந்து இருக்குமாம்; ஒரே கலராக இருக்காதாம்; இது ஒரே பிங்க் கலரில் இருப்பதால், பளிச் என்று இருக்கிறதாம்;
**
No comments:
Post a Comment