Friday, November 20, 2015

தந்தைக்கும் சி.சி.எல். விடுமுறையாம்!

CCL என்றால் Child Care Leave. குழந்தை பராமரிப்பு விடுமுறை;

இதுவரை பெண்களுக்கு மட்டுமே இத்தகைய விடுமுறை வழங்கப்பட்டு வந்தது; இனி இது ஆண்களுக்கும் வழங்கப்படுமாம்;

18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருப்பவர்களின் தாய் இந்த விடுமுறையை இதுவரை எடுத்து வந்தார்; இனி, இத்தகைய குழந்தைகளை வைத்திருக்கும் மனைவி இல்லாத தகப்பனார்களும் இத்தகைய விடுமுறையை எடுக்கலாமாம்;

இந்த சலுகை விடுமுறையை, ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாம்; மேலும் இதுவரை இதை ஒருவருடத்தில் மூன்று முறை மட்டும் எடுக்க முடிந்ததாம்; இதை இனி ஆறு முறை எடுத்துக் கொள்ளவும் அனுமதித்துள்ளதாம்; 
**

No comments:

Post a Comment