பிகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது; பழைய முதல்வர் நிதீஷ்குமார் அவர்களே
மீண்டும் முதல்வராகி விட்டார்; கூட்டு மந்திரிசபை ஏற்பட்டுள்ளது; கூடவே லாலு பிரசாத்
யாதவும் சேர்ந்துள்ளார்; யாதவின் மகன்களுக்கும் மந்திரி பதவி கிடைத்துள்ளது; ஒரு
மகனுக்கு துணை முதல்வர் பதவி;
பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து கிடைத்த வெற்றி என்று பிகார் மக்கள்
நினைக்கிறார்கள்; பா.ஜ. கட்சியை பிடிக்காதவர்கள் இப்போது முதல்வர் நிதீஷ்குமாருக்கு
ஆதரவு கொடுக்கிறார்கள்; இன்னும் ஒரு படி மேலே போய், அவர் பிரதமர் பதவிக்கு
தகுதியானவர் என்று உசுப்பேற்றுகிறார்கள்; பரூக் அப்துல்லா இந்த வேலையை
செய்திருக்கிறார்; தன்னுடைய இயலாமையை மற்றவர்கள் மூலம் தீர்த்துக் கொள்வார்கள்
போல!
இந்த உசுப்பேற்றும் வேலைக்கு முதல்வர் நிதீஷ்குமார் இடம் கொடுத்து விடக்கூடாது.
)(
No comments:
Post a Comment