சைனாவின் கமாண்டர் பெயர் Wu Shengli:
சைனாவின் தென் கடலில் அமெரிக்காவின் கப்பல்கள் அவ்வப்போது வந்து செல்கின்றன; பொதுவான கடலில் எல்லா நாட்டுக் கப்பல்களும் போக்கு- வரத்து செய்து வந்தாலும், அமெரிக்க இந்த கடலில் சுற்றித் திரிவது சைனாவை கோபப்படுத்தியுள்ளது.
சைனா கமாண்டர் சொல்கிறார், "நாங்கள் மிகவும் பொறுமை காக்கிறோம்; அமெரிக்கா, தான் சுற்றித்திரியும் செயலைக் குறைத்துக் கொள்ளும் என நம்புகிறோம்."
இதையும் மீறி, அமெரிக்கா சைனா கடலில் சுற்றித் திரிந்தால் தகுந்த பதிலடி கொடுக்க நேரிடும் என எச்சரிக்கையும் செய்திருக்கிறது;
ஒரு நாடு கோபப்படும் அளவுக்கு மற்ற நாடு நடந்துகொள்ளக் கூடாது என்றாலும், கடலில் பொதுவான பகுதி என்று வரையைறை செய்யப்பட்டுள்ளது: அந்தப் பகுதிகளில் எந்த நாட்டுக் கப்பல்களும் போக்கு வரத்து நடத்தலாம் என்ற விதியும் உள்ளது;
எனவே சைனா பயப்படத்தேவையில்லை; சர்வதேச கடல் சட்டத்தை மீறினால் மட்டுமே இந்த கோபம் நியாயமாகும்.
No comments:
Post a Comment