நிதீஷ்குமார் மீண்டும் பீகாரின் முதல்வரானார் இன்று; இவர் மீண்டும் ஐந்தாவது முறையாக முதல்வர் ஆகி உள்ளாராம்; அவருக்கு வாழ்த்துக்கள்;
பிகாரின் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதான் அரங்கில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்; இன்று வெள்ளிக்கிழமை அவரின் பதவியேற்பு;
இவரின் கூட்டணியில்தான் லாலுபிரசாத் யாதவும் இருக்கிறார்; இதை மெகா கூட்டணி என்று சொல்லிக் கொள்கிறார்கள்; எனவே லாலுவுக்குப் பதிலாக அவரின் மகன்கள் தெஷாஸ்வி பிரசாத் யாதவ், தேஷ் பிரதாப் யாதவ் இருவரும் மந்திரி ஆகிறார்கள்;
நிதீஷ் அவர்களின் கூட்டு மந்திரி சபையில் மொத்தம் 28 மந்திரிகளாம்; இவர் பதவி ஏற்பு விழாவுக்கு, மற்ற மாநிலங்களிலிருந்து மம்தா பானர்ஜி, ஒமர் அப்துல்லா, அரவிந் கேஜ்ரிவால், வந்திருக்கிறார்களாம்; டிவி செய்திப்படி தமிழ்நாட்டிலிருந்து தி.மு.க. சார்பாக ஸ்டாலின் அவர்களும் போய் உள்ளார் என்று சொல்லப்படுகிறது;
**
No comments:
Post a Comment