நியூசிலாந்து தனது தேசியக் கொடியை இதேபோல் வைத்துக் கொள்ளலாமா அல்லது வேறு ஒரு டிசைனுக்கு மாற்றிவிடலாமா என்று யோசிக்கிறது;
மக்களிடம் ஓட்டுமூலம் அவர்களின் யோசனையை கேட்கிறது; மொத்தம் ஐந்துவகையான கொடிகளின் மாடல்களை வைத்து, இதில் உங்களுக்கு எது பிடிக்கிறது என்று ஓட்டெடுப்பு நடத்துகிறது;
இப்போதுள்ள தேசியக் கொடியில் இங்கிலாந்தின் யூனியன் ஜாக்கின் அடையாளங்கள் உள்ளன என்று எண்ணுகிறதாம்; ஒருவேளை அடிமையாக இருந்த ஞாபகம் அப்பப்ப வருகிறதோ என்னவோ?
நியூசிலாந்தின் பிரதமர் ஜான் கே John Key சொல்கிறார், "இப்போதுள்ள தேசியக் கொடி, இன்றைய நியூசிலாந்தை பிரதிபலிக்கவில்லை" என்கிறார்;
மேலும், இந்த இப்போதுள்ள கொடி, சாடையில் ஆஸ்திரேலியாவின் கொடியை ஒத்து இருக்கிறதாம்; பக்கத்து நாடுதானே ஆஸ்திரேலியா;
பெர்ன் இலை வடிவம், கிவி வடிவம், ஆடு வடிவம், ஐஸ்கிரீம் வடிவம், தவக்களை அல்லது பாம்பு போன்ற வடிவம் (எனக்கு அது என்னவென்று தெரியவில்லை) என ஐந்து மாடல்களை கொடுத்து இதில் எதை விரும்புகிறீர்கள் என்று அரசு மக்களை கேட்டு அதை ஓட்டு பெட்டியில் போடும்படி கேட்கிறது;
எது, எதற்கோ எலக்சன் இருக்கும்போது இதற்கும் ஒரு எலக்சன் இருந்தால் என்ன?
**
No comments:
Post a Comment