வட கொரியாவும், தென் கொரியாவும் அவர்களின் பார்டர் பிரச்சனைக்கு தீர்வு காண ஒப்புக் கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது; அறுபது வருடப்பகை; இப்பொதுதான் ஓரளவுக்கு ஒப்புக் கொண்டுள்ளார்கள்; இந்தப்பகுதி மக்கள் பலர் அந்தப்பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளனர்; அதேபோல, அந்தப்பகுதி மக்கள் இந்தப்பகுதியில் மாட்டிக் கொண்டுள்ளனர்; ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடியாத உறவுகள்; வலிக்கத்தான் செய்யும்; பகைமை, இந்த பாழாப்போன வலியை உறவுகளுக்குக் கொடுக்கத்தான் செய்யும்; போர் இல்லாத உலகை உருவாக்க ஐநா சபை முயற்சிப்பதுடன், மனித உறவுகள் தங்கள் விருப்பம்போல சென்று சந்தித்துக் கொள்ளும் வழிமுறையையும் ஏற்படுத்த முயல வேண்டும்;
இருவரும் இணைய வாழ்த்துக்கள்!!
No comments:
Post a Comment