Friday, November 20, 2015

ஊனமுற்றோர் பிரச்சனை

ஊனமுற்றோர்களை Differently-abled என்று சொல்கிறார்கள்; அதன் மொழி பெயர்ப்பாக அதை "மாற்றுத்திறனாளி" என்று சொல்கிறார்கள்; இவர்களுக்கு பல இடங்களில் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்; ஐநா சபை உலக அளவில் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அந்தந்த நாடுகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தி இருந்தது; அதனால் சில வசதிகளை செய்து கொடுத்துள்ளது; இன்னும் பல வசதிகள் கிடைக்காமலேயே உள்ளது;

சென்னையில் பல கட்டிடங்களில் இப்படிப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஏறிச் செல்வதற்கு வசதியாக ரேம்ப் ramp என்னும் சறுக்குப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது; இவர்களுக்கான லிப்ட் இல்லை; 

இப்போது ரயில்வே வேலைவாய்ப்பு போர்டு தேர்வு நடத்தியது; அதில் பல கட்டிடங்களில் மாடிகளில் தேர்வு ஹால் இருந்ததால், பல மாற்றுத் திறனாளிகளால் அங்கு சென்று தேர்வு எழுத முடியவில்லையாம்;

இவர்கள் புகாரின் பேரில், அவர்களுக்கான தேர்வு மட்டும் வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாம்; அரசுகள் இவர்களையும் ஒரு பொருட்டாக நினைத்து, அதற்கு நிரந்தரமான தீர்வுகளை முன்னரே ஏற்படுத்தி வைத்துவிடலாம் என்பது என் யோசனை.
**

No comments:

Post a Comment