நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருப்பதைப் போன்ற ஒரு கடைந்தெடுத்த கஷ்டம் வேறு எதிலும் இல்லை; எங்கு போனாலும் நீண்ட க்யூவரிசை; கூட்டத்துக்கு ஏற்றாற்போல், வசதியை ஏற்படுத்துவது இல்லை; மக்கள்தானே, நின்றுவிட்டுப் போகட்டும் என்று ஆள்பவர்களுக்கும் அலட்சியம்; ஏதோ அவர்கள் தயவில் நாம் வாழ்வதைப் போன்று; மக்களாட்சி என்பது ஒரு கூட்டு முயற்சி; இதில் மக்களை புள்ளைப் பூச்சிகளாகப் பார்ப்பது வேடிக்கையாவும் வேதனையாகவும் உள்ளது;
இந்தியாவில் ஓட்டுப்போடப் போவதே பெரியவேலை! இதிலும் அங்குபோய் நீண்ட க்யூ வரிசையில் நிற்பது அதைவிட வேதனை;
இதற்கு முடிவாக, வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட நடவடிக்கை எடுக்கிறார்களாம்; ஈ-ஓட்டிங்; கம்யூட்டரிலேயே ஓட்டை போட்டுவிடுவது;
இந்த வேலையை எலெக்சன் கமிஷனர் ஓம் பிரகாஷ் ராவத் செய்வதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாராம்; இதனால் பேலட் பேப்பர் என்னும் ஓட்டு பேப்பரை அச்சடிக்க வேண்டிய அவசியம் இருக்காதாம்; இப்போதெல்லாம், ஒரு நீண்ட பேப்பரில் அதை அச்சடித்து தருகிறார்கள்; உள்ளே போய், யாருக்கு நாம் ஓட்டுப்போட வேண்டும் என்று தேட வேண்டி இருக்கிறது; ஈ-ஓட்டிங் வந்துவிட்டால் நல்லதுதான்;
எலெக்சன் கமிஷனர் ஓம் பிரகாஷ் ராவது இதை செய்தால் வரவேற்போம் அனைவரும்!
**
No comments:
Post a Comment