Wednesday, November 11, 2015

லூப்தான்சா ஜெர்மன் ஏர்லைன்ஸ்

லூப்தான்சா ப்ளைட்
லூப்தான்சா ஜெர்மன் ஏர்லைன்ஸ் Lufthansa German Airlines; இதுதான் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய ஏர்லைன்ஸ் நிறுவனம்;
இந்த ஏர்லைன்ஸ் 18 உள்நாட்டு ஏர்போர்ட்டுகளுக்கான சேவையையும், 197 வெளிநாட்டு ஏர்போர்ட்களுக்கான சேவையையும் நடத்தி வரும் மிகப் பெரிய நிறுவனம்;  அதாவது 78 மிக முக்கிய நாடுகளுக்கு தினமும் போய் வருகிறது; அதில் குறிப்பாக, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஏசியா, ஐரோப்பா நாடுகள் அடங்கும்;
இது தன்னிடம் மொத்தம் 280 விமானங்களை சொந்தமாகவே வைத்துள்ளது; இது இல்லாமல், லூப்தான்சா ஏஜி என்ற பெயரில், மற்ற கம்பெனி விமானங்களையும் வாங்கி பறக்க விடுகிறது; இப்படியாக மொத்தம் 615 விமானங்களை வைத்துக் கொண்டு உலகிலேயே நம்பர் ஒன் என்று பெயரெடுத்துள்ளது;
இதன் தலைமை அலுவலகம் ஜெர்மனி நாட்டில் கொலான் நகரில் (Cologne) உள்ளது;
லூப்தான்சா என்ற பெயரில், லூப்த் என்றால் காற்று என்று பெயராம்; ஹான்சா என்றால் கில்டு அதாவது கூட்டு, கூட்டம் என்று பெயராம்; காற்றில் கூட்டமாக பறந்து திரியும் என்று நினைத்து பெயர் வைத்திருப்பார்கள் போல!
இதில் வேலை செய்பவர்கள் கடந்த நான்கு நாட்களாக ஸ்டிரைக் செய்கிறார்கள்; இதனால், இதுவரை 2700 விமானங்கள் வானில் பறக்கவில்லை; புதன்கிழமை மட்டும் 930 ப்ளைட்டுகளை ரத்து செய்துள்ளது; ஒரு லட்சம் பயணிகள் பிரயாணம் ரத்தாகி உள்ளது; மிகப்பெரிய அடி;
19,000 தொழிலாளர்கள் வேலையை நிறுத்தி உள்ளனர்; பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஏர்லைன்ஸ் சொல்கிறது; வெகுகாலம், பணி ஓய்வு பிரச்சனை பற்றி ஏர்லைன்ஸ் பேசவில்லை என்று இந்த வேலைநிறுத்தமாம்; ஏர்லைன்ஸ் கோர்ட்டுக்கு போய், இது சட்டபூர்வமற்ற வேலை நிறுத்தம் எனவே அதை நிறுத்தவேண்டும் என்று கேட்கப் போகிறதாம்;
**

No comments:

Post a Comment