Saturday, November 7, 2015

அதிபத்த நாயனார்

அதிபத்த நாயனார்:
இந்த அதிபத்த நாயனார் சிவபக்தியில் சிறந்து விளங்கியவராம்; இவரின் கதை வேடிக்கையானது;
இவர் நாகபட்டினத்தில் பரதவ குலத்தில் பிறந்தவர்; கடற்கரை ஓரத்தில் வசித்து வந்தார்; சிவனின் மீது பைத்தியமான பக்தி; தினமும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வார்; அப்படி மீன் பிடிப்பதில், முதலில் கிடைக்கும் மீனை, எடுத்து வைத்துக் கொள்வார்; கரைக்கு வந்ததும், அந்த முதல் மீனை மட்டும் விற்று அதில் வரும் பணத்தை, சிவனுக்கு செய்ய வேண்டிய பூஜைப் பொருள்களை வாங்கி வணங்குவார்; இது தினமும் நடக்குமாம்;
எதையும் ஒரேமாதிரி நடத்தத்தான் இறைவன் விட மாட்டானே! எனவே அந்த அதிபத்த நாயனாருக்கு அன்று மீனே அகப்படவில்லை! மறுநாள் மீன் பிடிக்கப் போகிறார்; அன்றும் ஒரு மீன் கூடக் கிடைக்கவில்லை; இப்படி பலநாட்களாக மீன் கிடைக்காமலும், சிவனுக்கு தொண்டு செய்ய முடியாமலும் வருந்தி பட்டினியால் மனம் நொந்து இறைவனை வேண்டுகிறார்; சிவன் அவரின் பக்தியை மெச்சி நேரில் அவருக்கு காட்சி அளித்து, அவரின் எல்லாத் துன்பங்களையும் போக்குகிறாராம்;

**

No comments:

Post a Comment