சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவத் துளைத்தவைவேன்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம்பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)
| Picture courtesy: Google |
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி|
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி|
பொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ்போற்றி|
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி|
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி|
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி|
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்|
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
திருப்பாவை-24
(ஆண்டாள் பாடியது)
மாரி மழைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்|
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து|
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி|
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்|
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்|
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய|
சீரய சிங்கா சனத்திருந்து யாம்வந்த|
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
(திருப்பாவை-23)