கிருத்திகை
கிருத்திகையானது மூன்றாம் நட்சத்திரம்; இது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம்;
ஒரு சமயம், அக்கினி தேவன் சப்த ரிஷிகளின் மனைவிகளைப் பார்த்து மோகித்தான்; இதைக் கண்ட அவன் மனைவி பாரி சுவாகாதேவி தனது கணவன் அந்த ரிஷிகளின் மனைவிகளால் சபிக்கப்படுவான் என்று அஞ்சி, அருந்ததி தவிர்த்தி மற்ற ஆறு மனைவிகளின் உருவம் தாங்கி, ஆறு மனைவிகளாகி அவளின் கணவனைக் கூடினாள்; அந்த ஆறுபேருமே கிருத்திகை ஆகினர்; இவர்களால் வளர்க்கப்பட்டதால், குமாரக் கடவுள் கார்த்திகேயன் எனப் பெயர் பெற்றார்;
அயன சயனத்தால், ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு காலத்தில் முதலாவதாக வரும்;
திருஞானசம்மந்தர் காலத்தில், இந்த கிருத்திகை நட்சத்திரம் தான் முதலாவது நட்சத்திரமாக கணக்கிடப்பட்டது;
No comments:
Post a Comment