விதானமாலை-3
பார்க்கவனை நாரதனைக் குருவைப் பராசரனைக்
கார்க்கியன் பாரத்துவாசன் வசிட்டனைக் கைகுவித்துத்
தீர்க்க வணக்கஞ்செய்து ஆங்கு அவர் ஆரியச் செம்பனுவல்
ஏற்க மனங்கோண்டு இறைஞ்சி என் ஆர்வத் திருத்துவனே.
சுக்கிரன், நாரதன், குரு என்னும் வியாழன், பராசரன், கார்க்கியன், பாரத்துவாசன், வசிட்டன் என்னும் ஆசிரியர்களைக் கைகுவித்து நிறைய வணக்கம் செய்து அவர்கள் கூறிய வடமொழி நூல்களை இயையும்படி சிந்தித்து வணங்கி எனது விருப்பத்தில் அமைப்பேன்.
No comments:
Post a Comment