விதானமாலை
பூமகள் கேள்வன் பொன்னாடையன் புட்கொடியோன் புனித
நாமகள் கோனைத் தன் நாபியில் தந்தவன் மறையின்
பாமயன் அச்சுதன் பங்கயம் கண்ணன் பஞ்சாயுதன் தாள்
சேமம் என்று எண்ணி என் சிந்தையில் சென்னியில் சேர்த்துவனே.
இலக்குமியின் நாயகன், பீதாம்பரத்தை உடையவன், கருட கொடியை உடையவன், களங்கமற்றவன், சரஸ்வதியின் நாயகனான பிரம்மாவை தமது உந்திக் கமலத்திலிருந்து தோற்றுவித்தவன், நான்கு வேதங்களின் வடிவானவன், அழிவில்லாதவன், செந்தாமரை மலர்போன்ற கண்களை உடையவன், சங்கு சக்கரம் தண்டு வில் வாள் என்னும் பஞ்சாயுதங்களையும் உடையவனாகிய நாராயண மூர்த்தியுடைய திருவடிகளை நான் தரிசித்து நூலுக்கு காவல் நினைத்து மனதிலும் சிரசிலும் இருத்திக் கொள்வேன்.
No comments:
Post a Comment