Saturday, January 31, 2015

அவ்வியம் பேசி

அவ்வியம் பேசி அறம்கெட நில்லன் மின்|
வெவ்வியன் ஆகிப் பிறர் பொருள் வவ்வல்மின்|
செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும்போது ஒரு|
தவ்விக் கொடு உண்மின் தலைப்பட்டபோது.

---திருமந்திரம்

Sunday, January 25, 2015

உமையாள் பயந்த இலஞ்சியமே!

மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணப்போற்கைதா னிருப துடையான் றலைபத்துங் கத்தரிக்கவெய்தான் மருக னுமையாள் பயந்த விலஞ்சியமே.(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)

*
மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன்;
(நெருக்கமான பூமாலையை கொண்டு அலங்கரித்த கூந்தலையுடைய வள்ளியை மணம் புரிந்தவரே);

முத்தமிழால் வைதாரையும் இங்கு வாழ வைப்போன்;
(இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழிலாலும் தம்மைத் திட்டியவரையும் வாழ வைப்பவனே);

வெய்ய வாரணம்போல் கைதான் இருபது உடையான்  தலை பத்தும் கத்தரிக்க எய்தான் மருக;
(கொடிய யானையைப் போல, கைகள் இருபதும், தலை பத்தும் உடைய ராவணனின் தலையைக் கொய்த விஷ்ணுவின் மருமகனே);

உமையாள் பயந்த இலஞ்சியமே;
(உமை என்னும் உமா தேவி ஈன்றருளிய மகிழம்பூ போன்ற இனியவனே);

கிண்கிணி முகுள...

மரணப் ரமாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணைகிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுளசரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷாபரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.
(அருணகிரநாதரின் கந்தரலங்காரம்)
*
மரணப் பிரமாதம் நமக்கு இல்லையாம்;
(மரணம் என்னும் பெரும்நிகழ்வு நமக்கு வருவதில்லை);

என்றும் வாய்த்த துணை கிரணக் கலாபியும் வேலும் உண்டே;
(நமக்கு எக்காலமும் வாய்ப்பான, (கிரண) கதிர்வீசும் தோகையும் வேலும் உண்டு);

கிண்கிணி முகுள சரணப் பிரதாப;
(கிண்கிணி என்னும் சதங்கை அணிந்த பாதங்களை உடைய பிரதாபரே);

சசிதேவி மங்கல்ய தந்து ரக்ஷா பரண கிருபாகர;
(இந்திராணியின் மாங்கல்யத்தை காக்கும் கிருபாகரரே);

ஞானாகர சுர பாஸ்கர;
(ஞானத்தின் இருப்பிடமான, தேவ சேனாதிபதியே);

கோழிக் கொடியன்

கோழிக்கொடிய னடிபணி யாமற் குவலயத்தேவாழக் கருதும் மதியிலி யுண்ணவொட்டா துங்க ளத்தமெல்லாமாழப் புதைத்துவைத் தால்வரு மோநும் மடிப்பிறகே.
--அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்

கோழிக் கொடியன் அடி பணியாமல், குவலயத்தே வாழக் கருதும் மதியிலிகாள்;
(கோழிக் கொடியை உடைய  முருகக்கடவுளின் அடியைப் பணியாமல் வாழ நினைக்கும் மதியில்லாதவர்களே!)

உண்ண ஒட்டாது உங்கள் அத்தம் எல்லாம்;
(உங்கள் ஊழ்வினை, உங்களின் செல்வங்களை அனுபவிக்க விடாது);

ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப்பிறகே;
(ஆழமாகப் புதைத்து வைத்தாலும் உமக்கு  அதுகிடைக்காது);

Monday, January 19, 2015

சூரியன் வடக்கு நோக்கிப் பயணம்!

தை, மாசி, பங்குனி மூன்று மாதங்களும் சூரியன் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கிப் பயணம்! (ஐரோப்பியர்களுக்கு இது வருடத் தொடக்கம்)
சூரியன் நேர் கிழக்கில் இருக்கும்போது மூதாதையர் வழிபாடு செய்யப்படுகிறது! தை அமாவாசையில் முன்னோர் பூமிக்கு வருகின்றனர்!
சூரியன் வடக்கு கடகோடியிலிருந்து கிழக்கு நோக்கிய பயணம் சித்திரை 1-முதல் வைகாசி, ஆனி முடிய. (இந்தியர்களுக்கு வருடத் தொடக்கம்)
சூரியன் கிழக்கிலிருந்து தெற்கு நோக்கிய பயணம். ஆடி தொடங்கி ஆவணி, புரட்டாசி முடிய. (கிழக்கில் சூரியன் இருக்கும்போது மறுபடியும் மூதாதையர் வருகை) ஆடி அமாவாசை!

Thursday, January 15, 2015

கிரௌஞ்ச கிரி

சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவத் துளைத்தவைவேன்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம்பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)


சொன்ன (பொன்), கிரௌஞ்ச கிரி (கிரௌஞ்ச மலை), ஊடுருவத் துளைத்த, வைவேன் மன்ன (கூரிய வேலை மன்னா), கடம்பின் மலர்மாலை மார்ப (கடம்பப்பூ மலை அணிந்த மார்பை உடையவனே), மௌனத்தை உற்று (மௌனத்துடன்), நின்னை உணர்ந்து, எல்லாம் ஒருங்கிய, நிர்க்குணம் பூண்டு (குணம் கடந்த நிலையை அடைந்து), என்னை மறந்திருந்தேன், இறந்தே விட்டது இவ் வுடம்பு.

வையிற் கதிர் வடிவேலன்...

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்று
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணும் கடைவழிக்கே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

வையிற் கதிர் வடிவேலோனை (கூர்மையான கதிர் வீச்சுள்ள வடிவேலோனை), வாழ்த்தி, வறிஞர்க்கென்று (வறியவர்களுக்கு என்றும்), நொய்யிற் பிளவள வேணும் (நொய் அரிசியிலும் நொய்யான ஒரு சிறு பகுதியை), பகிர்மின் (பகிர்ந்து கொடுங்கள்), நுட்கட்கு இங்கன், வெய்யிற்கு ஒதுங்க (வெயிலுக்கு ஒதுங்குவதற்குகூட), உதவா உடம்பின் (உதவாத உடம்பை), வெறு நிழல் போல (வீணான நிழலைப் போல), கையிற் பொருளும், காணும் கடைவழிக்கு உதவாது (கடைசி காலத்திற்கு உதவாது).

Wednesday, January 14, 2015

பாதார விந்தம் அரணாக..

வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்த மரணாக வல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொளித்துச் சும்மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

வேத ஆகம, சித்திர வேலாயுதன், வெட்சி பூத்த (வெட்சிப் பூவைப் போல), தண்டைப் பாதார விந்தம் (தண்டை அணிந்த பாதங்கள்), அரணாக, அல்லும் பகலும், இல்லா, சூதானது அற்ற (குழப்பம் அல்லாத), வெளிக்கே, ஒளித்துச் சும்மா இருக்க, போதாய் இனி மனமே, தெரியாது ஒரு பூதர்க்குமே.

தடுக்கோண் மனத்தை...

தடுக்கோண் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்று
மிடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றத் திறக்கத் துளைக்கவைவேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்).

தடுக்கோண் மனத்தை (தடுக்கமுடியாத தடுமாற்ற மனத்தை தடுங்கள்), விடுங்கோள் வெகுளியை (கோபத்தை விடுங்கள்)
தானம் என்றும் இடுங்கோள், இருந்தபடி இருங்கோள் (உண்மை வழியில் இருங்கள்), எழுபாரும் உய்ய (ஏழு உலகமும் உய்ய), கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் துளைக்க (சூரன் மலையையே துளைக்க), வைவேல் (கூரிய வேல்), விடுங்கோன் (விட்ட வீரனே), அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே.

மூவடி கேட்ட அன்று...

தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபான்
மூவடி கேட்டன்று முதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

Picture courtesy: Google
தாவடி ஒடும் மயிலினும் (தாவி ஓடும் மயிலின் மீதும்), தேவர் தலையிலும், என் பா அடி ஏட்டிலும், பட்டது அன்றோபடி (மண்), மாவலிபான் (மாவலி மன்னன்), மூவடி கேட்ட அன்று (மூன்று அடி மண் கேட்ட அன்று), மூது அண்ட கூட (அண்டமே மூடி முகடு முட்டும்படி), சேவடி (திருவடிகளை) நீட்டும் பெருமான், மருகன் (மருமகன்), தன் சிற்றடியே. 

Monday, January 12, 2015

குப்பாய வாழ்க்கையுட் கூத்தாடும் ஐவரில்...

குப்பாய வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
விப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பு
மப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருழய்யச்
சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

குப்பாய வாழ்க்கையுள் (தோல்மூடியுள்ள இந்த உடம்பின் வாழ்க்கையுள்), கூத்தாடும் ஐவரிற் (ஆட்டம் போடுகின்ற ஐப்புலன்களும்), கொட்பு அடைந்த (சுழலும் வாழ்வில்), இப் பாச நெஞ்சினை, ஈடேற்றுவாய், இருநான்கு வெற்பும் (இரண்டு நான்குகளான எட்டு மலைகளுமான அட்டமலைகளும்), அப் பாதியாய் விழ, மேருங் குலுங்க, விண்ணாரும் உய்ய, (தேவர்களும் சிறக்க), சப்பாணி கொட்டியகை (சப்பாணி விளையாட்டில் கொட்டியகை), ஆறு இரண்டு கைககள் கொண்ட சண்முகனே.

திருவரைக் கிண்கிணி யோசை...

ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர்
வெருவரத் திக்குச் செவிடுபட் எட்டுவெற் புங்கனகப்
பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரனுடைய (ஒப்பில்லாத அந்த ஒருவனான சிவனின் பாகத்திலுள்ள உமாதேவியின் குமாரரான), மணிசேர் திரு அரைக் கிண்கிணி ஓசைபட (இரத்தினம் பொருந்திய இடுப்பில் சதங்கை ஒலி கேட்க), திடுக்கிட்டு அரக்கர், வெருவர (பயப்பட), திக்கு செவிடு பட (எல்லாத் திசைகளும் செவிடுபட),
எட்டு வெற்பும், (எட்டு மலைகளும்), கனகப் பருவரைக் குன்றும் (பொன்னால் ஆன பெரிய மலையான மேருவின் சிகரமும்), அதிர்ந்தன, தேவர் பயங்கெட்டது (தேவர்களின் பயம் நீங்கியது).
(சுப்பிரமணியக் கடவுளின் சதங்கை ஒலி கேட்டதால் இந்த நிகழ்வுகள்) .


சலதி கிழிந்து உடைபட்ட...

படைபட்ட வேலவன் பால்வந்தவாகைப் பதாகையென்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந்
துடைபட்ட தண்ட கடாக முகிர்ந்த துடுப்படல
மிடைபட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

படைபட்ட (படைகளை உடைய), வேலன் பால் வந்த (வேலனிடன் வந்த), வாகைப் பதாகை என்னும் (வெற்றிக் கொடியான)தடைபட்ட சேவல் (முருகனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்ட சேவல்), சிறகடிக் கொள்ள (சிறகை அடித்துக் கொண்டபோது), சலதி கிழிந்து (கடல் கிழிந்து), உடைபட்ட (பிரிந்து உடைந்தது), அண்டகடாகம் உதிர்ந்த (அண்டம் என்னும் குவிப்பு உதிர்ந்தது), உடுப்படலம் (இடையில் உள்ள படலமான நட்சத்திர கூட்டங்கள்), அடைபட்ட (இடிபட்டன), குன்றமும் மாமேரு வெற்பும் (குன்றுகளும், மலைகளும்), இடிபட்டவே. 


அசைபடு கால் பட்டு அசைந்தது மேரு

குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்
தசைபடு கால்பட் டசைந்தது மேரு வடியிடவெண்
டிசைவரை தூள்பட்ட வத்தூளின் வாரி திடர்பட்டதே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

குசை நெகிழா (கூர்மை குறையாத), வெற்றி வேலோன், அவுணர் (அசுரர்), குடர்குழம்ப (குடல் கலங்கும்படி), கசையிடு (கயிற்றால் வேகப் படுத்தப்-படும்)வாசி (குதிரை), விசைகொண்ட வாகன வேகமாகச் செல்லும் வாகனமான), பீலியின் கொத்து (மயிலின் தோகை), அசைபடு, கால்பட்டு (காற்றுப் பட்டு), அசைந்தது மேரு (மேரு மலையே அசைந்தது), அடியிட (மயிலின் கால் பட), எண்திசை வரை தூள்பட்ட (எட்டு திக்கும் தூள் பறந்தது), அத் தூளின், வாரி (கடல்), திடர்பட்டது (தீவுத்திடர் போலானது).

எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லை...

சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்து சும்மாவிருக்கு
மெல்லையுட் செல்ல வெனைவிட்ட வாவிகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

சொல்லுகைக்கு இல்லை என்று (சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என்று), எல்லாம் இழந்து, சும்மா இருக்கும், எல்லையுள் செல்ல (அந்த எல்லைக்குள் செல்ல), எனை விட்டவா, இகல் வேலன்நல்ல கொல்லியை (நல்ல பண் இசையை), சேர்க்கின்ற சொல்லியை (சொல்லை),   கல்வரைக் கொவ்வைச் செவ்வாய் (கன்மலையில் இருக்கும் கொவ்வைக் கனி பொன்ற சிவந்த வாயுடையவளை), புல்கின்ற (புணருகின்ற), மால்வரைத் தோள் அண்ணல் (மலைபோன்ற தோள்களையுடைய பெருமானான முருகக் கடவுள்), வல்லபமே (வல்லமையே).

தேனென்று பாகென்று உவமிக்க...

தேனென்று பாகென்று வமிக்கொ ணாமொழித் தெய்வவள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசரீரியன்று சரீரியன்றே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

தேன் என்றும், பாகு என்றும்,  உவமிக்க ஒண்ணாத (உவமை சொல்ல முடியாத), மொழித் தெய்வவள்ளி கோன், (முருகக்கடவுள்), என்றனுக்கு (எனக்கு), உபதேசித்தது ஒன்று உண்டு, கூறவற்றோ, வான் அன்று, கால் அன்று (காற்று அன்று), தீ அன்று, நெருப்புமன்று, நீர் அன்று, மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று (சரீரம் இல்லாததும் அன்று), சரீரி அன்று (உடல் உள்ளதும் அன்று).
(உவமையாகச் சொல்லத் தெரியவில்லை).

Sunday, January 11, 2015

ஆனந்த தேனை அநாதியிலே...

ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மே
லளியில் விளைந்ததொ ரானந்தத் தேனை யநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வாமுக மாறுடைத் தேசிகனே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

ஒளியில் விளைந்த, உயர் ஞானபூதரத்து (ஞான மலையின்), உச்சியின்மேல், அளியில் (அருளில்), விளைந்தது, ஓர் ஆனந்த தேனை, அநாதியிலே (இறைநிலையில்), வெளியில் விளைந்த, வெறும்பாழை பெற்ற வெறுந்தனியை (பிரணவத்தை), தெளிய விளம்பினவா (தெளிவாகச் சொன்னவரே), முகம் ஆறுடைத் தேசிகனே. 

உதிரக் குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து...

சளத்திற் பிணிபட் டசட்டு க்ரியைக்குட் டவிக்குமென்ற
னுளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக் களத்திற் செருக்கிக் கழுதாட வேறொட்ட காவலனே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்)

சளத்தில் பிணிபட்டு, அசட்டு கிரியைக்கு உட்பட்டு, தவிக்கும், எந்தன் உள்ளத்தில், பிரமத்தை (பிரம்ம மயக்கத்தை), தவிர்ப்பாய்அவ்வுணர்வு உரத்து, உதிரக் குளத்தில், குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து, வெற்றிக் களத்தில், செருக்கு கொண்டு, கழுது ஆட (பேய்கள் ஆட), வேலை ஓட்டிய காவலனே.
(அசுரனின் செருக்கை அழித்தவனே, எனது பிரம்ம மயக்கத்தையும் தெளிவிப்பாய்!)

கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து...

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை
விரும்புங் குமாரனை மெய்யன்பி னான்மெல்ல மெல்லவுள்ள
வரும்புந் தனிப்பர மானந்தந் தித்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)


பெரும் பைம் புனத்தினுள் (பெரிய பச்சை காட்டினில்), சிற்றேனல் காக்கின்ற (சிறு தினை கதிரை காவல் காக்கிற), பேதை கொங்கை (சிறு பெண்ணினை, வள்ளியை) விரும்பும், குமாரனை, மெய் அன்பினால், மெல்ல மெல்ல உள்ள (நினைக்க), அரும்பும், பரமானந்தம், தித்தித்து, அறிந்த அன்றே, கரும்புந் துவர்த்து, செந்தேனும் புளித்து கைத்து (கசந்து) விட்டதே!

கடல் அழ, குன்று அழ,

திருந்தப் புவனங்க ளீன்றபொற் பாவை திருமுலைப்பா
லருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றேதுங் குவலயமே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்).

திருந்த, புவனங்கள் ஈன்ற, பொற்பாவை (உமாதேவி), திருமுலைப்பால் அருந்தி, சரவணப் பூந்தொட்டில் ஏறி, அறுவர் கொங்கை விரும்பி (ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி), கடல் அழ, குன்று அழ, சூரன் அழ, விம்மி அழுத குருந்தை (குழந்தை) குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே!

ஓர ஒட்டார்... உன்ன ஒட்டார்... சேர ஒட்டார்...

ஓரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள்
சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட் டாரியிட் ரிமைப் போதினிற் கொன்றவனே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)


ஓர ஒட்டார் (ஒன்றை ஆராய்ந்து அறியமாட்டார்), ஒன்றை உன்ன ஒட்டார் (எண்ண மாட்டார்), உனது தாள் சேர மாட்டார், ஐவர் பகைவர் (ஐம்புலனும் பகை), செய்வது என் யான் (என்னால் என்ன செய்ய முடியும்), சென்று, தேவர் உய்ய, சோர நிட்டூரனைச் சூரனை (திருடனும், கொடியவனுமான சூரனை), கார் உடல், சோரிக்க (இரத்தம் சொட்ட), கூரகட்டாரி இட்டு, ஒர் இமை பொழுதினிலே கொன்றவனே.

கிரௌஞ்சம் குலைந்தது...

தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்ததுசூர்ப்
பேரணி கேட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)


தேர் அணி இட்டுப் புரம் எரித்தவன் மகன், செங்கையில் வேல் கூர் அணியிட்டு, கிரௌஞ்சம் (கிரௌஞ்ச மலை) அணுவாகி (பொடியாகி), அரக்கர் நேர் அணி இட்டு வளைந்த கடகம் நெளிந்தது, சூர்பேர் அணி (சூரன் படை) அழிந்தது, தேவேந்திரலோகம் பிழைத்தது.

அழித்து பிறக்க ஒட்டா..

அழித்துப் பிறக்கவொட் டாவயில் வேலன் கவியையன்பா
லெழுத்துப் பிழையறக் கற்கின் றிலீரேரி ழண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்கு வெங்கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)

அழித்து பிறக்க ஒட்டா, அயில் வேலன் (கூரான வேல்), கவியை, அன்பால், எழுத்துப்பிழையற, கற்கின்றிலீர் (கற்க தெரியாவிட்டால்), ஏரி மூண்டதென்ன (தீமுண்டது போல்), விழித்து, புகை எழ, பொங்கு, வெம் கூற்றன் (யமன்), விடும் கயிற்றால், கழுத்தில் சுருக்கு இட்டு, இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே.

(சுப்பிரமணியக் கடவுளின் புகழைப் பாடுவோர்க்கு இந்த எம வேதனை இல்லை).

அம்புலியின் கீற்றை...


பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப் ரபஞ்சமென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வாசெஞ் சடாடவிமை
லாற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப்புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)

பேற்றை, தவம் சற்றும் இலாத, என்னை, பிரபஞ்சம் என்னும் சேற்றை, கழிய விட்டவாரேசெம்-சடா அடவிமேல், ஆற்றை, பணியை இதழியை தும்பையை, அம்புலியின் கீற்றை (நிலவொளியை), புனைந்த பெருமானின் குமாரன், கிருபாகரனே! (சுப்பிரமணியக் கடவுளே).

கண்டு கொண்டேன்...

அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
றடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)

அடல் = வலிமை;
அருணை = திருவண்ணாமலை;
வாயிலுக்கு வடவருகில் = வாசலின் வடக்கு அருகில்;
சென்று கண்டுகொண்டேன் = தரிசித்தேன்;
வருவார் தலையில் = வருபவர் அவரவர் தலைமீது;
தடபட டெனப்படு = தடதடவென்று;
குட்டுடன் = தலையில் குட்டிக் கொள்ளும்;
சர்க்கரை மொக்கிய கை = குட்டிக்கொண்டபின், அமுது உண்ணும் கையுடன்;
கடதட கும்ப களிற்றுக்கு = மதம்பிடித்து திரியும் யானை கடவுளுக்கு;
இளைய களிற்றினை = இளைய யானையான தம்பி யானையான சுப்பிரமணிய கடவுளை;


(முருகனைப் பாடிய கந்தரலங்காரத்தில் விநாயகரை கடவுள் வாழ்த்தில் பாடவேண்டும் என்பதால், அவரைப் பாடிய அதேபாட்டிலிலேயே விநாயகரின் தம்பி சுப்பிரமணியக் கடவுளையும் பாடி, இருவருக்கும் ஒரே கடவுள் வாழ்த்தாக பாடிய அருணகிரிநாதர்).

Saturday, January 10, 2015

ஏறுமயிலேறி விளையாடு முகமொன்றே!

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்விணை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடி சூரரைவ தைத்தமுக மொன்றே
வள்ளியை மணப்புணர வந்தமுக மொன்றே
ஆறுமகு மானபொரு ணீயருளல் வேண்டும்
ஆதி யருணாசல மமர்ந்த பெருமாளே.


(அருணகிரிநாதர், திருவண்ணாமலையில் சுப்பிரமணிய கடவுளைத் துதித்து முதன் முதலில் பாடியது. இவர்தான் தன் ஆன்மாவை தனது உடலைவிட்டு நீக்கி, ஒரு கிளியின் உடலில் புகுந்து, திருச்செந்தூர் சென்று சுப்பிரமணிய கடவுளை வழிபட்டு திரும்பியபோது, தன் உடலைக்காணது, கிளி உடலிலேயே இருந்தவர்.)


Friday, January 9, 2015

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்


"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்"

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்|
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்|
 வங்கண் உலகுஅளித்த லான்.|
 ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்|
 காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு.|
 மேரு வலம்திரி தலான்.|
 மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்|
 நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்|
 மேநின்று தாஞ்சுரத்த லான். பூம்புகார்| போற்றுதும் பூம்புகார் போற்றுதும்.|


மாலே மணிவண்ணா!

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்|
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்|
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன|
பாலன்ன வண்ணத்துள் பாஞ்ச சன்னியமே|
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனரே|
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே|
கோல விளக்கே கொடியே விதானமே|
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
(திருப்பாவை-26)

Wednesday, January 7, 2015

அன்று இவ்வுலகம் அளந்தாய்!


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி|

சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி|

பொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ்போற்றி|

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி|

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி|

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி|

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்|

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-24

(ஆண்டாள் பாடியது)


 


Tuesday, January 6, 2015

மாரி மழைமுழைஞ்சில்

மாரி மழைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்|

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து|

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி|

மூரி நிமிர்ந்து  முழங்கிப் புறப்பட்டுப்|

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்|

கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய|

சீரய சிங்கா சனத்திருந்து யாம்வந்த|

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

(திருப்பாவை-23)