Saturday, July 25, 2015

கருநெல்லிக்கனியின் காயசித்தி

ஔவையார் வாழ்ந்த காலத்தை புறநானூறு பாடலைக் கொண்டு தீர்மானிக்கின்றனர். 

"அமிழ்துவிளை தீங்கனியெளவைக் கீந்த...... அதிகன்." தூதாக தொண்டைமானிடம் சென்றவர். இவைகளைக் கொண்டு ஔவை வாழ்ந்த காலத்தை உக்கிரபெருவழுதி முதல் கம்பர் காலம் வரை வாழ்ந்தவர் என்கின்றனர். அப்படியென்றால் இவருக்கு வயது 800 மேல் இருந்திருக்க வேண்டும். முடியுமா? ஔவை என்ற மனுஷி 800 வருடங்கள் எப்படி வாழ்ந்திருக்க முடியும்? அதன் பதில், கருநெல்லிக்கனி என்கின்றனர். 

"கருநெல்லிக்கனியுண்டு காயசித்தி பெற்றதுதான் காரணம்" என்கின்றனர் ஆராய்ச்சியார்கள். 

மனிதன் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உயிர் வாழலாம் என்று திருமூலர் கூறியுள்ளாராம். 

"ஒரு நாளில், மனிதனுக்கு (நமக்கு) 21,600 சுவாசங்களை உண்டாகுமாம். அதை குறைத்து பயிற்சி செய்து 730 ஆக ஆக்கிக் கொண்டால், 3000 வருடங்கள் கூட உயிர் வாழலாம் என்று திருமூலர் சொல்லியுள்ளராம். 

இந்த வல்லமையெல்லாம் நமக்கு கைவராது. யோகசாஸ்திரம் பயின்றவர்களுக்கு வேண்டுமானால் கைவரக்கூடும். 
(நாம் 3000 வருடம் வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம். 70, 80 வருடமே மிக அதிகம்தான்).

No comments:

Post a Comment