Monday, July 27, 2015

அஷ்டவக்கிரன்

வயிற்றில் இருக்கும் குழந்தை வெளி உலகச் செயல்களை கவனிக்கிறது என்பது உண்மைதானாம். தாயின் மனநிலையை அறிந்து கொள்ளுமாம். தன் விருப்பதை காலை உதைத்து தெரிவிக்குமாம். அவ்வாறு குழந்தைகள் பேசுவதும், தாய் தந்தை பேசுவதை குழந்தை கவனிப்பதும் இயல்பானதுதானாம். இங்கு ஒரு குழந்தை கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டது.

ஏகபாதன் என்று ஒருவர். அவன் மனைவி சுஜாதை. இவர்களுக்கு ஒரு புத்திரன் சுஜாதையின் கருவில் வளர்கிறான். ஏகபாதன் தனது சிஷ்யர்களுக்கு மரத்தடியில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். மாணவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏகபாதன் மனைவியும் அந்த பாடம் நடத்தும் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறாள். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை அவன் தந்தை நடத்தும் பாடத்தை கவனமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. குழந்தை, தன் தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதே நன்றாக பாடம் கற்றுவிட்டது.

ஒருநாள்:
மாணவர்களை, கற்ற பாடத்தை திருப்பி சொல்லும்படி கூறிவிட்டு ஏகபாதன் உறங்குகிறார். மாணவர்கள் பாடத்தை மாற்றி மாற்றிச் சொல்கிறார்கள். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு இந்த தவறை பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம். தந்தையிடம் வயிற்றுக்குள் இருந்தே சொல்கிறதாம். நீங்கள் தவறுதலாக சொல்லிக் கொடுத்து விட்டீர்கள் என்று. தந்தைக்கு கோபம்! உடனே சாபம்! மகனே நீ உடல் குறையுள்ளவனாக பிறப்பாய்.

அதன்படியே எட்டு குறைகளுடன் குழந்தை பிறக்கிறது. அவனுக்கு "அஷ்டவக்கிரன்" (எட்டுக் குறை உள்ளவன்) என்றே பெயர் சூட்டுகிறார்கள். அவன் பெரியவனானதும், அங்கு வந்த தேவ கன்னியர்கள் (அழகிகள்) இவனை ஏளனம் செய்தார்கள். அவனுக்கு கோபம். அழகிகளான நீங்கள் திருடர்களால் திருடப்படுவீர்கள் என்று சாபமிடுகிறான். அதன்படியே இவர்களை கள்வர்களின் பிடியில் சிக்கினார்களாம். இந்தக் கதையை அர்ச்சுனனுடன் தொடர்பு படுத்தி சொல்கிறார்கள். அதன் விபரம் தெரியவில்லை. 


No comments:

Post a Comment