ஒருநாளுக்கும் இன்னொரு நாளுக்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்குமா? திங்கட்கிழமையும் செவ்வாய்கிழமையும் ஒரே மாதிரியான நாட்களா? அல்லது வேறு வேறு குணாதியங்கள் கொண்ட நாட்களா? சாதாரணமாக ஒருநாளை அதன் குணத்தை வைத்து அடையாளப்படுத்திவிட முடியுமா? சும்மா, நம் சௌரியத்துக்காக நாட்களுக்கு பெயர் இட்டுள்ளோமா அல்லது இதில் ஏதாவது வித்தியாசப்படுத்தும் அளவுக்கு குணங்கள் உள்ளதா? எல்லா நாட்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் தெரிகிறது. இதில் திங்கள் என்ன செவ்வாய் என்ன என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. சந்திரன் பூமியை சுற்றுகிறது. 15 நாட்கள் வெளிச்சமுள்ள நாட்களாகவும் (அதிலும் சிறிது சிறிதாக பெரிய வெளிச்சமாகும் நாட்களாகவும்), மற்றொரு 15 நாட்கள் அந்த வெளிச்சம் குறைந்து கொண்டேபோய், இருட்டு இரவாகவும் மாறுகிறது. இதுதான் ஒரு மாதத்தில் இரவில் தெரியும் வித்தியாசம். பகலில் இத்தகைய வித்தியாசம் தெரிவதில்லை. இதைக்கொண்டு நாள்களை அடையாளப்படுத்தி இருக்கிறார்களோ? ஒவ்வொரு நாளுக்கும் ஏதோ ஒன்றின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதோ? ஒருமாதத்துக்கு இது சரியாக வருகிறது. மற்ற மாதத்துக்கும் இதேபோலத்தான் இருக்கும். அப்படியென்றால் இந்த மாதங்களை எப்படி பிரித்து அந்த நாட்களை அடையாளம் காண்பது. இதில் ஏதோ சூட்சமம் இருக்கிறது. நமக்குத்தான் விளங்கவில்லை!
கலை
கலை என்றால் நாள் என்று சொல்வார்களோ?மொத்தம் 16 கலைகள் உள்ளனவாம்.
பிரதமை (பௌர்ணமி) முதல் பூரணை (அமாவாசை) வரை மொத்தம் 15 கலைகளாம்.
1) பிரத கலை = அக்கினி
2) துவித கலை = ஆதித்தன்.
3) திருதிய கலை = விச்சுவதேவர்.
4) சதுர்தக கலை = வருணன்.
5) பஞ்சம கலை = வஷ்டகாரம்.
6) சஷ்ட கலை = வாசவன்.
7) சப்த கலை = முனிவர்.
8) அஷ்டம கலை = ஏகபாதசிவம்.
9) நவம கலை = மறலி.
10) தசம கலை = வாயு.
11) ஏகாதச கலை = பார்ப்பதி.
12) துவாதச கலை = பிதிர்கள்.
13) திரயோசத கலை = குபேரன்.
14) சதுர்தச கலை = சிவன்.
15) பூரண கலை = பிரமதேவர்.
16ல் மீதியுள்ள ஒரு கலை மட்டும் சந்திரனுக்கு.
No comments:
Post a Comment