பிள்ளையார் பிறந்த கதையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்லி சென்றுள்ளார்கள்.
கஜானனன் என்றால் யானைமுகன் என்று பொருளாம். சிவனின் இரண்டு மகன்களில் ஒருவர்.
பிரணவ வடிவமே இவரின் வடிவம் என்றும் சொல்கின்றனர். யானை முகம், துதிக்கையுடன் ஐந்து கைகள், பருத்த வயிறு, குறுகி பருத்த கால்கள், ஒற்றை கொம்பு. (இது எப்படி பிரணவ வடிவமாக இருக்கிறது என்பது தெரியவில்லை).
எந்தச் செயலை செய்வதற்கு முன்பு இவரை வணங்கித் தொடங்கினால் எந்த தடையும் (விக்கினமும்) இல்லாமல் நல்லவிதமாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளதால் இவருக்கு விக்னேஷ்வரர் என்றும் பெயர். விக்கின விநாயகர்.
அறிவும் செயலும் சேர்ந்து இருப்பதால் இவருக்கு சித்தி, புத்தி என இரண்டு சக்திகள் இருப்பதாக சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment