Saturday, July 25, 2015

யாதுமூரே...

கனியன் பூங்குன்றனார்
இவர்தான் "யாதும் ஊரே யாவரும் கேளிர் .. . .. என்ற இவரின் புறநானூற்றுப் பாடலைக் கொடுத்தவர்.
உக்கிரபெருவழுதி மன்னர் காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவராம்.

முழுப்பாடலும் இதோ:

"யாதுமூரே யாவருங்கேளிர்
தீதுநன்றும் பிறர்தரவாரா
நோதலுந்தணிதலுமவற்றறோரன்ன
சாதலும்புதுவதன்றேவாழ்த
லினிதெனமகிழ்தன்று மிலமே முனிவி
னின்னாதென்றலுமிலமே மின்னோடு
வானந் தண்டுளி தலை இயானாது
கல்பொருந்திரங்குமல்லற்பேர்யாற்று
நீர்வழிப்படூஉம் புணைபோலாருயிர்
முறைவழிப்படூஉமென்பதுதிறவோர்
காட்சியிற்றெளிந்தனமாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலுமிலமே
சிறியோரையிகழ்த லதனினுமிலமே."

No comments:

Post a Comment