சாங்கியம்:
பல மதங்களில் இது ஒருவகையான மதம்.
சாங்கியம் என்பது ஒரு யோகநூல். அது இரண்டு வகையில் சொல்லப்படுகிறது. ஒன்று, சேச்சுவர சாங்கியம், மற்றொன்று, நீரிச்சுவர சாங்கியம்.
அத்வைத தத்துவங்களை கூறுவது சேச்சுவர சாங்கியம்.
மாயா பந்தங்களிலிருந்து விலகி வாழ்வதே முக்தி என்ற தத்துவத்தை கபிலர் விளக்கினார். அது நீரீச்சுவர சாங்கியத்தின் கொள்கை ஆகும். அதுவே கபிலர் மதம்.
பரமாத்மாவைவிட வேறு ஒன்றும் உண்மையில்லை என்பது வேதாந்தம். எனவே அது வேதாந்த மதமாகியது.
ஆன்மா வேறு, பரமாத்மாவும் வேறு என்று பிரித்து கூறுவது சாங்கியம்.
கபிலர்:
இவர் சாங்கிய யோகம் செய்தவர். அரி வம்சத்தில் இவரை "விதாதா புத்திரர்" என்று அழைப்பார்களாம். இவர் காலத்தில், சகர சக்கரவர்த்தி என்ற மாமன்னர் இருந்தார். இவர் 100 அசுவமேத யாகம் செய்ய வேண்டும் என்று நினைத்து, 99 அசுவமேத யாகங்களைச் செய்து முடித்துவிட்டாராம். 100 வது அசுவமேத யாகத்துக்கு குதிரையை தயார் செய்து அலங்கரித்து, திக்விஜயத்துக்கு அனுப்புகிறார். குதிரையுடன் இவரின் புதல்வர்கள் 60,000 பேர்களையும் அனுப்புகிறார். இந்தக் குதிரை வெற்றியுடன் வந்துவிட்டால், 100 அசுவமேத யாகம் பூர்த்தியாகிவிடும். 100 அசுவமேத யாகம் செய்பவருக்கு இந்திர பதவி கிடைக்குமாம். எனவே அப்போது அந்த இந்திர பதவியில் இருந்த இந்திரன் பயந்து விட்டான். 100 யாகம் நடக்கவிடக் கூடாது என்று முடிவு செய்தான். மாய வேஷத்தில் வந்து, யாருக்கும் தெரியாமல் குதிரையை கடத்திச் சென்றுவிட்டான். குதிரை காணமல் போன இடம், கபிலர் தவம் செய்யும் குடிலிக்கு பக்கத்தில். எனவே எல்லோரும், கபிலர்தான் குதிரையை திருடி இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்கள். அவரை கொல்ல நினைத்து அவரை நெருங்கினார்கள். அவர் சாபம் இடுகிறார். எல்லோரும் சாம்பலாகிறார்கள்.
இந்தக் கபிலரும் சாங்கிய மதத்தை உருவாக்கிய கபிலரும் ஒருவர்தானா? தெரியவில்லை.
No comments:
Post a Comment