ரிஷி
ரிஷி என்றால் உண்மை, சத்தியம் என்று பொருளாம். சத்தியத்தை தரிசிப்பவர்கள் ரிஷிகள் என்கிறார்கள்.
இத்தகைய ரிஷிகள் மொத்தம் ஏழு வகை உண்டாம்.
1) பிரம்ம ரிஷி
2) தேவ ரிஷி
3) மகா ரிஷி
4) பரம ரிஷி
5) காண்ட ரிஷி
6) சுருத ரிஷி
7) ராஜ ரிஷி
வசிஷ்டர் போன்றோர் பிரம்ம ரிஷிகளாம்.
நாரதர், கபிலன் போன்றோர் தேவ ரிஷிகளாம்.
வியாசர் போன்றோர் மகா ரிஷிகளாம்.
பேலர் முதலியோர் பரம ரிஷிகளாம்.
ஜைமனி முதலியோர் காண்ட ரிஷிகளாம்.
சுசுருதர் போன்றோர் சுருத ரிஷிகளாம்.
மாந்தாதா, ஜனகன் போன்றோர் ராஜ ரிஷிகளாம்.
1) பிரம்ம ரிஷி = நிறைநிலையில் இருப்பவர்கள்
2) தேவ ரிஷி = உலகத்துக்கு ஆன்ம ஞான உபதேசம் செய்வர்.
3) மகா ரிஷி = புத்தி தத்துவம் கடந்து மகா தத்துவம் சென்றவர்.
4) பரம ரிஷி = உலக இன்பத்தை துறந்து, ஆன்ம பலத்தை நாடுபவர்.
5) காண்ட ரிஷி = வேதத்தில் ஒரு காண்டத்தில் வித்தகர்.
6) சுருத ரிஷி = வேதங்களை படித்து அதை பிரச்சாரம் செய்பவர்.
7) ராஜ ரிஷி = ராஜ்ஜியம் முறைகளை உலகில் நிலைநாட்ட அவதரிப்போர்.
மகா ரிஷிகள்:
காண்பதற்கும் உணர்வதற்கும் முடியாத தூலநிலை முதலாக சூக்கும நிலைவரை இந்த பிரபஞ்சத்தில் உள்ளவற்றை, அதாவது இந்த அண்டத்தில் உள்ள கோடான கோடி பொருள்களில் (தத்துவங்களில்) உள்ள கண்டு அதன் உண்மைகளை வெளியிடுபவர்கள் இந்த மகாரிஷிகள்.
பொதுவாக ரிஷிகளின் வாக்கு (சொல்) எப்போதும் பொய்யாவதில்லையாம்.
No comments:
Post a Comment