Wednesday, July 29, 2015

கலியுகம்

இந்த பிரபஞ்சம் ஒரு கால எல்லைக்குள்தான் சுற்றி வருகிறதாம். இதன் மொத்த காலம், 17 லட்சத்து இருபத்தெண்ணாயிரம் வருடங்கள் கொண்டதாம்.(17,28,00,000 வருடங்கள் கொண்ட பிரபஞ்சம் இது). இது மொத்தம் நான்கு யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு பிரளயம் (சுனாமி) வருமாம். ஒவ்வொரு யுகத்தின் மக்களின் குணங்களும் மாறுபட்டு இருக்குமாம். 

இப்போது நடப்பது கலியுகம். கலியுகம் தொடங்கி சுமார் 5000 வருடங்கள் கடந்துவிட்டனவாம். மொத்த கலியுகத்தின் வருடங்கள் 4,32,000. இதில் இதுவரை போன 5,000 வருடங்கள்போக, மீதி 4,27,000 வருடங்கள் கலியுகத்தில் மீதி வருடங்களாக உள்ளன. 

கலியுகம் என்பது மோசமான யுகம். மக்கள் மோசமானவர்களாய் இருப்பார்களாம். நல்லவர்களை பார்த்து அரிது. 5000 வருடங்களான இந்த கலியுகம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்போதே மக்களின் குணங்களை சகித்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் 4 லட்சத்து 27 ஆயிரம் வருடங்களுக்குப் பின் மக்களை எப்படி இருப்பார்கள் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நல்லவேளை நாம் முன்னரே பிறந்துவிட்டோம். 

அப்படி நினைத்து மகிழ்ச்சி அடைய முடியாது. நாம் மறுபிறவிகளில் அந்த கடும் கலியுக காலங்களில் மனிதனாக பிறப்போம், வாழ்வோம். இறைவன் நம்மை அவ்வளவு எளிதில் விட்டுவிடமாட்டான்போலும்.

No comments:

Post a Comment