பெண்ணே! திருமகளே! பேதையரே தாலேலோ!
மானே! குயிலினமே! வண்டினமே! தாருவே!
தேனே! மதனபி டேகமே தெள்ளமுதே!
வானோர் பணியு மரகதமே! மாமகளே!
என்னிடுக்க ணீங்க ஈங்குவந்த தெள்ளமுதே!
பூமலர்கள் சூழும் பூங்கா வனத்துதித்த
மாமகளே! சோதி மரகதமே! தாலேலோ!
வண்டினங்கள் பாடு வாழும் பூங்காவில்
பண்டு பெரியாழ்வார் பரித்தெடுத்த தெள்ளமுதே!
செந்நெல்கள் முத்தீன்று செழிக்கும் புதுவையினில்.
....
(கோதைநாச்சியார் தாலாட்டு)
No comments:
Post a Comment