Saturday, July 25, 2015

பகீரதன்

கங்கை
கங்கை நதியானது, முதலில் தேவலோகத்தில்தான் ஓடிக்கொண்டிருந்ததாம். அதை இமயமலையில் உற்பத்தியாகி இந்த பூமியில் ஓடுமாறு கேட்டவர் பகீரதன். 

இந்த பகீரதன் மூதாதையர்கள் சகரர், கபிலர். இவர்கள் இருவரும் இறந்து விட்டார்கள். இறந்தால் மேல் உலகம் செல்லவேண்டும். அடுத்த பிறவிகளுக்கு தயார் ஆகவேண்டும். அங்கு கணக்கு எடுப்பார்கள் போல. ஆனால் இவர்கள் இரண்டுபேரும் ஏதோ பெரிய பாவம் பண்ணியவர்களாம். அதனால் இவர்கள் இறந்தவுடன் இவர்களை அழைத்துச் செல்ல புஷ்பக விமானம் வரவில்லை. மாட்டுவண்டிகூட வரவில்லை. எனவே இந்த பூமிக்கு அடியில் பாதாள உலகத்தில் அவர்களின் ஆன்மா சுத்திக் கொண்டு இருக்கிறது. இதை இவர்களின் வாரிசான பகீரதன் பார்க்கிறான். 

மூதாதையர்கள் மேல் இரக்கம் கொள்கிறான். சிவனை நோக்கி தவம் செய்கிறான். கடும்தவம். சிவன் மனம் இரங்கி விட்டார். பகீதரனின் மூதாதையரின் ஆன்மாக்கள் ஏதோ பாதாள லோகத்தில் உள்ளதாம். அங்கு யாரும் செல்ல முடியாது போல. கங்கை நதியை அங்கு அனுப்பி அதை கொண்டுவர வேண்டும் போல. சொர்க்கத்தில் ஓடிய கங்கையை இங்கு வரவைத்தார். பெரிய நதியாம். எனவே அதை தடுத்த சிவன் தன் தலையில் ஓடும்படி செய்து கொண்டாராம். 

பகீரதன் கேட்தற்காக ஏழு துளி நீரை மட்டும் இமயமலையில் விட்டாராம். அது ஏழு நதிகளாக ஓடியது. அவ்வாறு ஓடிய நதி அங்கு தியானத்தில் இருந்து ஜன்னுவ முனிவரின் குடிலை அழித்து விட்டதாம். அவருக்கு கோபம். ஒரு அம்பை எடுத்து நதியை நோக்கி விட்டார். தடையாகி விட்டது. அதை தெரிந்த பகீரதன் அந்த முனிவரை வேண்ட அவரும் இரக்கப்பட்டு, அந்த நதியை அமைதியாக தனது காது வழியே செல்லும்படி சொன்னாராம். அவ்வாறு பொறுமையாக  ஓடி, பாதாளத்தை அடைந்து அங்கிருந்த பகீரதனின் மூதாதையர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சொர்க்கத்து அனுப்பி வைத்தானாம். 

பகீரதன் கூப்பிட்டு வந்ததால் இந்த நதிக்கு பகீரதி என்று பெயராம்.
ஜன்னுவ முனிவரின் காதில் நுழைந்து வருவதால் ஜானவி என்றும்,
ஆகாயம், பூவுலகம், பாதாள உலகம் என்று எங்கும் சென்று வந்ததால், இந்த நதிக்கு திரிபதகை என்றும் பெயராம். நாம் இதைத்தான் கங்கை என்கிறோம். இது மேல் உலகத்திலிருந்து வருவதால் புண்ணியநதி ஆகிவிட்டது. 

No comments:

Post a Comment