கந்துருவை
கசியபனின் மனைவிகளில் ஒருத்திதான் இந்த கந்துருவை.
கசியபனுக்கு மொத்தம் 15 மனைவிகள். அதில் 13 பேர் தட்சனின் மகள்கள். மற்ற இருவரும் வேறு ஒருவரின் மகள்கள்.
இந்த கந்துருவையும் தட்சனின் 13 மகள்களில் ஒருத்தி. இந்த கந்துருவை மூலம்தான் நாக குலம் உருவானதாம். ஆதிசேஷன், கார்கோடன் ஆகிய பாம்பு வம்சத்துக்கு இவர்தான் தாயார். இவளுடைய சக்களத்தி என்பவள் விநதை (கணவனின் மற்றொரு மனைவி).
இவர்கள் இருவரும் திருப்பாற்கடலில் உச்சைசிரவம் என்னும் குதிரை வந்ததைப் பார்த்து ஆசை கொண்டனர். அதில், கந்துரு என்பவள் இந்த குதிரை கருப்பு என்கிறாள். மற்றவள் இதை வெள்ளை என்கிறாள். இருவருக்கும் போட்டி வருகிறது. போட்டியில் யார் தோற்கிறார்களோ அவர்கள் மற்றவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்கிறார்கள். கந்துருவை தன் மகன் ஆதிசேஷனைக் கூப்பிட்டு அந்த குதிரையை கருப்பாக்கச் சொல்கிறாள்., அவன் மறுக்கிறான். மற்றொரு மகன் கோடகனிடம் சொல்ல அவன் இரவில் போய் அந்த குதிரைக்கு விஷம் கொடுத்த கருப்பாக்குகிறான்.
விடிந்து விட்டது, காலையில் பார்க்கிறார்கள். குதிரை கருப்பாக இருக்கிறது. போட்டியில் தோற்ற விநதை அடிமையாகிறாள். இந்த ஏமாற்று தெரிந்தவுடன், விநதை கோபமாகி, "யோக்கியனான ஆதிசேஷன் தவிர மற்றவர்கள் எல்லாம் சர்ப யாகத்தில் மடிந்து இறப்பீர்களாக" என்று சபித்து விட்டாள். அதனால்தான் எல்லா பாம்புகளும் சர்ப யாகத்தில் மடிந்தன.
No comments:
Post a Comment