Wednesday, July 29, 2015

யதோ தர்மஸ் ததோ ஜய

காந்தாரி:
காந்தார தேசத்து மன்னனான சபலன் மகள் இந்த காந்தாரி. இவளை திருதராஷ்டிரனுக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கட்டாயம் நேருகிறது. இவள் கணவன் திருதராஷ்டிரனுக்கு கண் தெரியாது என்பதால், இவளும் தன் கண்களை கட்டிக் கொண்டு கணவனுடன் வாழ்ந்த கற்புக்கரசி. இவளின் மகன் தான் துரியோதனன். இவளுக்கு மொத்தம் 100 பிள்ளைகள் என்றும் சொல்வார்கள். இவள் மிகவும் நேர்மையானவள் என்பதற்கு உதாரணமாக கீழ்கண்ட நிகழ்வைச் சொல்வார்கள்.

மகாபாரத யுத்தம் தொடங்கி விட்டது. இவளின் மூத்த மகன் துரியோதனன் போருக்கு போகும்முன் இவளிடம் வந்து ஆசி பெற்றுச் செல்ல வருகிறான். அவளை வணங்கி ஆசி கேட்கிறான். இவள் தன் மகன் தான் ஆசி கேட்கிறான் என்றும் பாராமல், "தருமம் எப்படியோ அப்படியே வெற்றியும்" என்று வாழ்த்துகிறாள்.

அதை, சமஸ்கிருத்தில், "யதோ தர்மஸ் ததோ ஜய" என்று கூறியதாகச் சொல்வார்கள்.
மகனே ஆனாலும், தர்மம் வெல்லட்டும் என்று சொன்னவளே இந்த காந்தாரி. 

No comments:

Post a Comment