எட்டுத் திசைகள்;
கிழக்கு,தென்கிழக்கு, தெற்கு என்று தொடங்கி வடகிழக்கில் முடியும். இந்த எட்டு திசைகளுக்கும் அதிபதிகளும் அவர்களுக்கு யானைகளும் உண்டு.
கிழக்கு = இந்திரன் (யானை -ஐராவதம்)
தென்கிழக்கு = அக்கினி (யானை- புண்டரீகம்)
தெற்கு = யமன் (யானை- வாமனம்)
தென்மேற்கு = நிருதி (யானை- குமுதம்)
மேற்கு = வருணன் (யானை-அஞ்சனம்)
வடமேற்கு = வாயு (யானை-புஷ்பதந்தம்)
வடக்கு = குபேரன் (யானை-சார்வபௌமம்)
வடகிழக்கு = ஈசானன் (யானை-சுப்பிரதீகம்)
இந்த எட்டுப் பேரின் மனைவிகளுக்கு எட்டு பெண்யானைகளும் உள்ளதாம்.
அவை முறையே:
அப்பிரம், கபிலை, பிங்கலை, அநுபமை, தாமிரபரூணி, சுப்பிரதந்தி, அங்கனை, அச்சனாவதி என எட்டு பெண் யானைகள்.
இதை இவர்களின் வாகனம் என்கிறார்கள்.
எதற்கு இவர்களுக்கு வாகனம் வேண்டும் என்று தெரியவில்லை. மேல் உலகில் இந்திரனே பெரிய மன்னன். இவனிடம்தான் ஆகாய விமானம் எல்லாம் இருந்ததாம். அதை இராவணன் வந்து பிடுங்கிக் கொண்டானாம். அந்த இந்திர விமானத்தில்தான், இராவணன் சீதையை கடத்திக் கொண்டு போனதாக கதையும் உண்டு.
கிழக்கில் இந்திரன் இருப்பதால்தான், எல்லோரும் கிழக்குதிசை புகழ்தரும் திசை என்று கருதுகிறார்கள் போலும். இந்திரனைப் போல வாழலாம் என்று நினைக்கலாம்.
ஆனால் இந்த இந்திரனுக்கே கடன் கொடுத்தவர் குபேரன். (பெருமாளுக்கும் இவர்தான் கடன் கொடுத்திருப்பார் போலும்). இந்திர லோகத்தில் சென்ட்ரல் பாங்க் வைத்திருப்பார் போலும். இந்த குபேரன் இருக்கும் திசை வடக்கு. அதனால்தான் பெரும்பாலோர் வடக்கு திசை பார்த்து உட்கார்ந்து இருக்கிறார்கள் போல!
நாம் கிழக்கே உட்கார்ந்தால் நாமும் இந்திரன் ஆகிவிடமுடியுமா? அவன் ஆயிரம் யாகங்கள் செய்தவன். அவனுக்கு எல்லா வளங்களும் கிடைத்ததில் நியாயமே! நாம் ஒரு மூன்று நிமிடம் மூச்சை அடக்க முடியாதவர்கள்.
No comments:
Post a Comment