ஆகமங்கள்:
ஆகமம் என்பது ஈசுவரனால் அருளப்பட்ட தந்திர சாஸ்திரங்களாம். இவை சைவ ஆகமம், வைஷ்ணவ ஆகமம் என இரண்டு தந்திர சாஸ்திரங்களாம்.
சைவ ஆகமம்:
காமிகம் முதல் வாதுளம் வரை மொத்தம் 28 ஆகமங்களாம். இவைகள் ஈசனின் முகத்திலிருந்து தோன்றியதாக சொல்கிறார்கள். தந்திரம் என்பது தத்துவமாக அமைக்கப்பட்ட விக்கிரகங்கள், ஆலயங்கள், பூஜைகள் அவற்றின் உண்மைப் பொருள்கள் இவற்றைப் பற்றி சொல்லப்பட்டிருக்குமாம். (தந்திரம் என்பது ஒரு வேலையை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்ற ஒரு வழிகாட்டியாக இருக்குமோ?) இந்த ஆகமங்கள் தந்திரங்கள் மட்டும் அல்லாது மந்திரம், சிந்தாந்தம் என்னும் மூன்று விஷயங்களையும் சொல்லி இருக்குமாம். அவ்வாறு எவ்வளவு ஆகமங்கள் இருக்கிறதாம்? ஒவ்வொரு ஆகமமும் ஒரு கோடி கிரந்தங்களை (பாடல்களை) கொண்டதாம். அவ்வாறு 28 ஆகமங்களும் 28 கோடி கிரந்தங்களை கொண்டதாம்.
வைஷ்ணவ ஆகமம்:
வைஷ்ணவ ஆகமங்கள் இரண்டு உண்டாம். அவை பாஞ்சராத்திரம் மற்றும் வைகானசம். இந்த ஆகமங்களைத்தான் சோமகாசுரன் கடலுக்கு நடுவில் கொண்டு போய் மறைத்து விட்டான் என்றும், அதனால்தான் விஷ்ணு ஐந்து இரவுகளில் சாண்டில்ய ரிஷிக்கு இதை உபதேசித்து விட்டார் என்றும் சொல்வார்கள். ஐந்து இரவில் சொன்னதால் அது பாஞ்சராத்திரம் எனப் பெயர் பெற்றதாம். வைகாசனம் என்னும் ஆகமம் துறவறத்தை பற்றி சொல்கிறதாம்.
இந்த எல்லா மந்திரத்தையும் (ஆகமத்தையும்) சிவன்தான் முதலில் சொல்லி இருக்கிறார். அதில் பாஞ்சராத்திரம், வைகானசம் திருடு போய்விட்டதால் அதை விஷ்ணு மறுபடியும் சொல்லி இருக்கிறார். விஷ்ணு சொன்னதால் அது வைஷ்ணவ ஆகமம் ஆகிவிட்டது போல!. மற்றவை சைவ ஆகமம் ஆகிவிட்டது போல!
இந்த ஆகமங்களில்தான் யோகம், பிராணாயாமம், மந்திரங்களின் உத்தாரணம், சந்தியாவந்தனம், பூஜை, ஜெபம், ஹோமம் முதலியவற்றையும், பிராயசித்தம், சிராத்தம், சிவலிங்க இலக்கணம் முதலிய பலவிஷயங்களையும் சொல்லி உள்ளார்களாம். ஆகமம் என்பது இறைவன் சொல்லி அவனிடமிருந்தே நேராகக் கிடைக்கப் பெற்றறு என்ற பொருளாம்.
Dei thevudiya naaaye perumal dha vaaikhanasam pancharatram sonnadhu
ReplyDeleteoruvela Vishnu 28 Agamangalaiyum Solliirukkalam , adhu thiruduponadhunaala sivan thirupiyum sollikan pola....