வைஷ்ணவர் ஒருவர் ஸ்ரீரங்கத்தில் இருந்தார். இவருக்கு ஒரு தாசியிடம் நெருங்கிய பழக்க வழக்கும் உண்டு. அவள் சம்புகேசுரத்தில் இருக்கிறாள். அவள்மீது ஆசை கொண்டு இந்த வைஷ்ணவர் அங்கு போகிறார். அவள் சிவன் கோயிலுக்குள் நடனமாடிக் கொண்டிருக்கிறாள். அவள் ஆட்டத்தை முடித்துவிட்டு வரட்டும் என்று சிவன் கோயில் பிரகாரத்தில் படுத்துக்கிடந்தார். நேரமாகிவிட்டது. அப்படியே தூங்கிவிட்டார். அந்த பிரகாரத்திலேயே மற்றொருவன் சரஸ்வதியை நினைத்து கடும் தவத்தில் இருந்து வருகிறார்.
இன்று இரவு, அவனின் தவத்தை மெச்சி, சரஸ்வதி கடவுள் அங்கு வருகிறார். தவமிருந்தவன் பக்கத்தில் வந்து அருள் புரியும் பொருட்டு, அவன் வாயில், இந்த சரஸ்வதியின் வெற்றிலை எச்சியை உமிழப் போகிறார். அவனோ, இந்த எச்சியை வாங்க மாட்டேன் என்று மறுத்து சரஸ்வதியை திட்டிவிடுகிறான்.
சரஸ்வதி பேசாமல் சென்று, பிரகாரத்தின் மற்றொரு பக்கத்தில் தாசிக்காக காத்துக் கொண்டு, அவளை நினைத்து கனவு கண்டுகொண்டு இருக்கும் வைஷ்ணவரிடம் சென்று, அவன் வாயில் சரஸ்வதி தன் வெற்றிலை எச்சிலைத் துப்புகிறாள். அவரோ தூக்கத்தில் இருக்கிறார். தாசிதான் வந்து நம்மை இதழில் முத்தம் கொடுக்கிறாள் என்று நினைத்து அந்த எச்சில் வெற்றிலையே தன் நாவில் சுவைத்து கண்ணைத் திறக்காமலேயே மகிழ்கிறார்.
சரஸ்வதி மறைந்து விட்டாள்.
வைஷ்ணவர் தூக்க கலக்கத்தில் எழுந்திருக்கிறார். முழுவதும் தாசி நினைவு. திடீரேன்று தனக்கு கவிபாட தோன்றுகிறது. மேகத்தைப் போல கவிகளை அள்ளி விடுகிறார். சரஸ்வதியின் அருள். அவருக்கு தெரியாது.
அதிலிருந்து கவி மழை பொழிகிறார். அவர்தான் கவி காளமேகம். திருமலைராயன் மன்னர் அழைத்து அவரின் அரண்மனையில் அரசரவை கவி ஆக்கிக் கொள்கிறார். பல ஆசுகவிகள் பொழிந்தாராம்.
adhu saraswati illa da thiruvanaikaval akilandeswari
ReplyDelete