Monday, July 27, 2015

அம்பை

அம்பை:
காசிராஜனுக்கு மொத்தம் மூன்று மகள்கள்; அம்பை, அம்பிகை, அம்பாலிகை. இந்த மூத்தமகள் அம்பை, பக்கத்து நாட்டு சாளுவ மன்னனை காதலித்தாள் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லையில்லை, இவளின் தகப்பனாரான காசிராஜனே இவளுக்கு சுயம்வரமாக இந்த சாளுவ மன்னரை கணவனாக ஏற்படுத்தி வைத்திருந்தார் என்றும் சொல்கிறார்கள். 

இந்த விபரம் தெரியாமல், பீஷ்மர் தன் தம்பியாகிய விசித்திரவீரியனுக்கு பெண் கேட்டு காசி நாட்டை அடைந்து, அங்கிருந்த அந்த மூன்று பெண்களையும் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறார். 

அதில் அம்பை, தான் ஏற்கனவே சாளுவ மன்னருக்கு கொடுக்கப்பட்ட பெண் என்று கூறியதால், அவளை அங்கு அனுப்பி வைக்கிறார். ஆனால், சாளுவ மன்னர், கடத்திக்கொண்டு போன பெண்ணை ஏற்க மாட்டேன் என்று மறுக்கிறார். திரும்பவும் பீஷ்மரை சந்தித்து, எல்லோரும் கைவிட்டால் என் நிலை என்ன என்று கேட்டு அவரையே திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறாளாம். அவர் எப்போதும் பிரம்மச்சரியத்தில் இருப்பவர். இதை மறுக்கிறார். 

அவளுக்கு கோபம் உச்சத்திற்கு செல்கிறது. ஒரு பெண்ணை அலட்சியம் செய்தால் அவள் கோபத்தின் உச்சிக்கே போவாள். அதனால் அவள் எதை வேண்டுமானாலும் செய்யவாளாம். பின்விளைவிகளைப் பற்றி சிறிதும் கவலைப்பட மாட்டாளாம். அதன் உச்சக்கட்டமாகத்தான், அம்பை தீ வளர்த்து அதில் புகுந்து தீக்கிறையாகி, மறுபிறவிவரை அதை நினைவில் வைத்து மறுபிறவியில் சிகண்டி என்ற பெயரில் துருபதன் மகனாகப் பிறத்து, பின் உடல் அளவில் மகளாக மாறி, பாரத யுத்தத்தில் பீஷ்மரை கொல்கிறார்.

பீஷ்மர் எந்த மனிதனாலும் சாகடிக்க முடியாத வரம் பெற்றவர்; ஆனாலும், ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் உள்ள ஒரு மனிதனே அவரைக் கொல்ல முடியும் என்று வரமாம். இதை அறிந்த அம்பை, தன் மறுபிறவியில் ஆணாகப் பிறந்து பின் பெண்ணாக மாறி (திருநங்கையாகி) அதன் பின்னரே பீஷ்மரை கொன்றிருக்கிறார். 

No comments:

Post a Comment