Tuesday, July 28, 2015

இந்திரத்துயுமனம்

இந்திரத்துயுமனம்:
இந்திரத்துய்மனன் என்பவர் ஒரு மன்னர். இவன் பெருவாரியான ஆடுமாடுகளை தானம் செய்தான். இவைகள் எல்லாம் ஒரு இடத்தில் நின்றதால் அது பெரிய பள்ளமாகிவிட்டது. இதில் மழை பெய்து நீர் நிறைந்து விட்டது. இந்தமாதிரி நீர்நிலையை"வாபி" என்பர். அதனால், மன்னன் பேரை இணைத்து இந்திரத்துயுமனம் என்று பெயர் வைத்து விட்டார்களாம்.

இந்த மன்னன் இந்திர உலகத்தை பார்க்க போய்விட்டான். பூமியில் இல்லை. எனவே இந்த மன்னனை எல்லோரும் மறந்து விட்டனர். வெகுகாலம் கழித்து, பூவுலத்திற்கு திரும்பி வருகிறார் மன்னர். இங்கு பழைய ஆட்கள் யாருமே இல்லையாம். ஒரே ஒருவர் மட்டம் அவரைப் பற்றி கேள்விப்பட்டதாக சொல்கிறார். அவர் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, பல சந்ததிகள் மாறி மாறி வந்துள்ளது மன்னருக்கு தெரிந்ததாம். 

நாம் வாழும் காலத்தில்தான் மகிமை பெருமை எல்லாம். நமக்குப்பின் இந்த உலகம் வேறு வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இதில் நாம் எங்கிருக்கிறோம் என்றுகூட தெரியாது. புகழ் பெற்றவர்கள்கூட ஒரு காலக்கட்டம் வரை நினைவில் இருப்பார்கள். கடைசிவரை நினைவில் இருப்பவர்கள் மிக மிகக் குறைவே.

No comments:

Post a Comment