இந்த பிரபஞ்சத்தை பல கதைகள் மூலம் விளக்குகிறார்கள் நம் முன்னோர்கள். அதில் ஒரு கதையாக "ரிக் வேதத்தில்" இந்த கதையை சொல்லியுள்ளார்களாம்.
கசியப பிரஜாபதிக்கு அதிதி மனைவி. இந்த அதிதிக்கு பிறந்தவர்கள் மொத்தம் எட்டுப் பேர். அந்த எட்டுப்பேரில், ஒருவனான விசுவதன் மட்டும் இங்கேயே விட்டுவிட்டு, மற்ற ஏழு பிள்ளைகளுடன் தாய் அதிதி தேவர்களிடம் சென்றிருக்கிறாள். விட்டுவிட்டுப் போன விசுவதன் என்பவன்தான் இங்குள்ள சூரியன். அவன் இந்த பூமிக்கு (பூலோகத்துக்கு) ஒளி கொடுத்துக் கொண்டு இங்கேயே இருந்துவிட்டான். மற்ற ஏழுபேரும் மேலே உள்ள ஏழு உலகங்களுக்கு சூரியர்களாய் இருந்தார்களாம். அப்படியென்றால் பல சூரியன்கள் இருக்கின்றன என்றுதானே பொருள்.
இந்த சூரியன்களை ஆதித்தியர் என்கின்றனர். ஆதித்தியர் என்றால் ஜோதி உருவம். வெளிச்ச வெளி. சூரியன் என்பது அக்னி உருவம்.
இப்படித்தான் ரிக் வேதத்தில் பல சூரியன் இந்த பிரபஞ்சத்தில் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளதாம்.
அருமை,அருமை
ReplyDelete