ஔவையார்
பகவன் என்பவருக்கும், அவரின் மனைவி ஆதி என்பவருக்கும் பிறந்தவர்தான் இந்த ஔவை. பகவனும் அவரின் மனைவி ஆதியும் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டனராம். என்ன? நமக்கு பிறக்கும் குழந்தைகளை, அவைகள் பிறந்த இடத்திலேயே விட்டுவிட்டு சென்று விடுவோம் என்று உடன்படிக்கையாம்.
ஔவை எத்தனையாவது பிள்ளை என்று தெரியவில்லை. ஆனால் அவர் பிறந்தவுடன் அந்த ஔவை குழந்தையையும் அங்கேயே விட்டுவிட்டு செல்கிறார்கள். ஆனால் தாய் பாசம் சும்மா இருக்குமா? போக மனமில்லாமல், திரும்ப திரும்ப பார்க்கிறாள். அப்போது ஔவை குழந்தை தன் தாயை நோக்கி கவிபாடி தன் தாய்க்கு ஆறுதல் கூறினாராம். (பிறந்த குழந்தை கவி பாடியதா? அதனால்தான் அது ஔவையார் ஆனதோ!) பிறந்த குழந்தை என்ன கவி பாடியது. (ஔவைக் குழந்தையின் கவியினை என் தமிழில் எழுதியுள்ளேன்)
" எவ்வுயிரையும் காப்பதற்கு ஈசன் உண்டா இல்லையா, அவ்வுயிரில் யானும் இங்கு ஒருவர்தானே. அவ்வி, அருகுவது கொண்டு இங்கு அலைவானேன் என் தாயே, வருவது தானே வரும்."
வருவது தானே வரும், நீ கவலைப்படாதே தாயே என்று பிறந்த குழந்தை தன் தாய்க்கு ஆறுதல் கூறியதாம். எப்போதும் தாயைப் பிரியும் குழந்தைதான் அழும். இங்கு குழந்தையை பிரியும் தாய் அழுகிறாள். பிறந்த குழந்தை தாய்க்கு ஆறுதல் சொல்கிறது. அதுதான் ஔவையார். இவர் லேசுப்பட்டவர் இல்லை போலத் தெரிகிறது.
No comments:
Post a Comment