Saturday, July 25, 2015

ஏனாதி

ஏனாதி நாயனார்
நாயனார் என்றால் சிவபக்தர். திருநீறு பூசியவர்களைக் கண்டால் அவரும் சிவன்தான் என்று கட்டிப்பிடத்துக் கொள்வார். இது என்ன வகையான பக்தியோ. (லண்டனில் நம்ம ஊர்காரனை பார்ப்பதுபோல பரவசம் வந்துவிடுமோ?). 

இவர் இந்தமாதிரி பைத்தியம் என்று தெரிந்தால் எதிரி சும்மா இருப்பானா? இவர் ஒரு போர் வீரராம். வீரனுக்கு எதுக்கு இரக்ககுணம். ஒரு போரில் எதிரி, அவன் நெற்றி முழுக்க திருநீறு பூசி வந்திருக்கிறான். சிவன் வந்துவிட்டான் என்று அவனை வணங்கி தழுவி இருக்கிறார். அவன் எதிரி என்று தெரிந்தபின்னரும் சண்டை போடவில்லையாம். போட்டான் ஒரு போடு. ஏனாதி போய்சேர்ந்தார். இது என்ன பக்தியோ? 

ஒருவேளை இப்போது இவர் சொர்க்கத்தில் இருக்கலாம். இல்லையென்றால், சிவன், இவரை தன் பக்கத்திலேயே, அடுத்த பிறவி கொடுக்காமல், உட்கார வைத்திருக்கலாம். யாருக்கு தெரியும். பக்தனுக்குத்தானே பகவானின் மனம் புரியும்.

No comments:

Post a Comment