Saturday, July 25, 2015

கணம் புல்ல நாயனார்

கணம் புல்ல நாயனார்
இவர் ஒரு சிவபக்தர். வெறும் பக்தர் மட்டும் இல்லை. சிவன் மீது பைத்தியமாகவே இருப்பவர். அதனால்தான் நாயனார் ஆகி இருக்கிறார். 

இவர் கதை:
சிவன் கோயிலில் விளக்கு போடுவதை தனது பெரும் தொண்டாக கருதி செய்து வந்திருக்கிறார். வேறு வேலைக்கு போக மாட்டார்போல. காட்டுக்கு சென்று, புல் வெட்டி (கணம்புல் என்றால் புல் தானே?) அதை விற்று அந்த பணத்தைக் கொண்டு சிவனுக்கு விளக்கு போடுவாராம். 

ஒருநாள் சிவனுக்கு எரிந்து கொண்டிருந்த விளக்கில் எண்ணெய் இல்லையாம். விளக்கு அணைந்து விடும்போல இருக்கிறது. வேறு வழி தெரியவில்லை இந்த நாயனாருக்கு. உடனே தன் தலைமுடியை அந்த விளக்கில் காட்டி எரிவைத்தாராம். (பைத்திரக்கார பக்திபோல). இதைப் பார்த்த சிவன் உடனே வந்து அவரை காப்பாற்றி சொர்க்கத்துக்கு கூட்டிக் கொண்டு போனாராம். 

புல்லு வெட்டி விளக்குப் போட்டதால் கணம் புல்ல நாயனார் ஆக்கிவிட்டார்களோ? இவரின் உண்மைப் பெயர் தெரியவில்லையே!

No comments:

Post a Comment