நரசிங்கம்:
விஷ்ணு ஒருவனை கொல்வதற்காக எடுத்த உருவமே இந்த நரசிங்கம்.
கதை:
இரணியகசிபன் என்ற மன்னன். இவன் கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் வரம் வாங்கிவிட்டான். அந்த வரத்தின்படி, இந்த இரணியகசிபனை யாருமே கொல்ல முடியாதாம். யாருமே என்றால், தேவர்களாலும், மனிதனாலும், அசுரர்களாலும், மிருகங்களாலும், கொல்ல முடியாதாம். அப்படியென்றால் யாருமே கொல்ல முடியாத வரம் அது.
இந்த வரத்தை வாங்கியவுடன் அவன் தன் வேலையை ஆரம்பித்து விட்டான். எல்லோரும் தன்னை வணங்கும்படியும் மற்ற கடவுள்களை வணங்க கூடாது என்று கட்டளை. இவனின் கட்டளையை இவனின் மகனே எதிர்க்கிறான். விஷ்ணுதான் கடவுள், அவரையே வணங்குவேன் என்கிறான். உடனே இரணியகசிபன் தன் வாளை எடுத்து மகனை வெட்ட எத்தனித்து, உன் கடவுள் உன்னை வந்து காப்பாற்றட்டும் என்று கூறுகிறான். அப்போது விஷ்ணு, அங்குள்ள தூணை உடைத்துக் கொண்டு மனித-சிங்கமாக தோன்றி அவனை கொல்கிறார். மனிதனும் இல்லாமல், மிருகமும் இல்லாத ஒரு உயிரனம்தான் இந்த நரசிங்கம். அவ்வாறு காப்பாற்றப்பட்ட அந்த இரணயகசிபனின் மகன்தான் பிரகலாதன்.
No comments:
Post a Comment