Wednesday, July 29, 2015

புனிதவதி

காரைக்காலில் தனதத்தன் என்று வியாபாரி. அவரின் மகள்தான் புனிதவதி. இவரே பின்னர் காரைக்கால் அம்மையார் என்று பெயர் பெற்றவர்.
இவர் சிவ பக்தை. 

இவர் திருமணமாகி, கணவர் வீட்டில் இருக்கிறார். அங்கு இவரின் கணவரின் நண்பர் இவர் வீட்டுக்கு வந்து இரண்டு மாங்கனிகளை கொடுக்கிறார். அதை வாங்கி வீட்டில் வைத்தவர். ஒன்றை எடுத்து ஒரு சிவ பக்தனுக்கு தானமாகக் கொடுத்துவிடுகிறார்.

வீட்டுக்கு வந்த கணவனிடம் மற்றொரு மாம்பழத்தை கொடுக்கிறார். அதை அவர் கணவர் வாங்கி சாப்பிட்டுவிட்டு மற்றொன்றையும் தருமாறு கேட்கிறார். 

அதைத்தான் ஏற்கனவே தெருவில் வந்த ஒரு சிவ பக்தனுக்கு கொடுத்து விட்டாரே. வீட்டின் உள்ளே போய், சிவனிடம் வேண்டுகிறார். சிவன் இவருக்கு ஒரு மாம்பழத்தை தருகிறார். அதைக் கொண்டுபோய் கணவனிடம் கொடுத்துவிட்டு, நடந்ததை சொல்கிறார்.

அதை நம்பாத கணவர், உனக்கு சிவன் மாம்பழம் கொடுத்தார் என்பது உண்மையானால், அவரிடமே இன்னொரு மாம்பழத்தை வாங்கிவா பார்க்கலாம் என்று கூறுகிறார்.

அதேபோல, வீட்டின் உள்ளே சென்று சிவனை வேண்டுகிறார். அவரும் மற்றொரு மாம்பழத்தை தருகிறார். பெற்றுவந்து கணவன் பரமதத்தனிடம் கொடுக்கிறார். 

இவர்தான் பின்நாளில், அற்புத திருவந்தியும், திருவிரட்டை மணிமாலையும் பாடியவர்.

மற்றொரு பெருமை; இவர்தான் கைலாசம் வரை தலைகீழாக தன்தலையாலேயே நடந்து சிவனிடம் சென்றார். அங்கிருந்த சிவன், இவரை, "அம்மையே" என்று அழைத்தாராம். 

No comments:

Post a Comment