Thursday, July 30, 2015

பிருந்தாவனம்

பிருந்தாவனம்:
ஜலந்திரன் என்னும் ஒரு அசுரன். இவன் கங்கையின் மகனாம். சமுத்திர ராஜன் என்னும் மன்னனுக்கும் கங்கைக்கும் பிறந்தவன் இந்த ஜலந்திரன். இவனின் மனைவி பிருந்தை. இவள் உலகமகா அழகியாம். 

மனிதன் ஏன் தவறு செய்கிறான். ஆசைதான் காரணம். ஆனால் கடவுளுக்கு எதற்கு ஆசை வருகிறது என்றுதான் தெரியவில்லை. கதையின் கோளாரா? அதை சொன்னவர் கோளாரா? என்றுதான் தெரியவில்லை.

விஷ்ணுவுக்கு இந்த பிருந்தையின் மேல் அளவில்லா ஆசை வருகிறது. எப்படியும் அவளை அடைந்துவிடவேண்டும் என்று தீர்மானம் செய்து கொள்கிறார். இப்படிப்பட்ட ஆசைகள் வந்தால், புத்தி மழுங்கியே விடும். அப்படித்தான் விஷ்ணுவுக்கும் மழுங்கிவிட்டது. அவளின் கணவன் உண்மையில் அன்று இறந்துவிடுகிறான். இறந்த உடலுக்குள் விஷ்ணு உள்ளே நுழைகிறார். ஜலந்திரன் உடலில் விஷ்ணு. ஜலந்திரன் மனைவி பிருந்தைக்கு இது தெரியாது. கணவன் வந்திருக்கிறான் என்றே அவனுடன் உறவில் ஈடுபடுகிறாள். வெகுநாட்களாக இது நடக்கிறது. ஒருநாள், அவளுக்கு சந்தேகம். உன்னிப்பாக கவனித்து, இவன் தன் கணவன் இல்லையென்று தெளிவாக அறிந்து கொண்டாள். இவன் யார் என்று கேட்கிறாள். விஷ்ணு என்று தெரியவருகிறது. கோபம் தலைக்கேறி விடுகிறது. விஷ்ணுவை சபிக்கிறாள். வேறு என்ன செய்ய முடியும். (அதனாலதானோ என்னவே விஷ்ணு, அவரின் மனைவி இல்லாமலேயே எங்கும் போகிறார் வருகிறார்போல!). 

விஷ்ணுவுக்கு இருந்தாலும் அவள் மீது பயம். ஏனென்றால், அவளின் கணவன் பலசாலி. அவள் கணவன், ஏற்கனவே ஒருமுறை, பிரம்மாவின் கழுத்தைப் பிடித்து தூக்கிவிட்டான். பிரம்மா மன்னிப்பு கேட்டதால் விட்டுவிட்டான். அவன் மனைவியுடன் சரசம் வைத்துக் கொள்ளலாமா இந்த விஷ்ணு. ஏற்கனவே அவன் இந்த விஷ்ணுவையை தோற்கடித்தவன். எல்லோருக்குமே சிம்ம சொப்பனமாக இருந்தவன் இந்த ஜலந்தரன். அவனை கொன்ற ஒரேஒருவர் சிவன்தான். தேவர்கள் எல்லாம் பயந்து ஒழிந்தபோது, சிவன் வந்து அவனை கொன்றார். அப்படி அவன் இறந்தபோதுதான், இந்த விஷ்ணு இப்படியான ஒரு இழி செயலை செய்து, சாபத்துக்கு ஆளானாராம். சாபம் என்ன என்று தெரியவில்லை. 

அந்த அழகி பிருந்தா இறந்துவிடுகிறாள். அவளை தகனம் செய்த இடமே பிருந்தாவனம். அதனால்தானோ என்னவோ, இந்த விஷ்ணு, அந்த பிருந்தாவனத்திலேயே சுற்றி சுற்றி வருகிறார்போலும். 

(விஷ்ணு என்பதை பலவாறு பலபேருக்கு பெயராக கொண்டுள்ளனர். பல சாஸ்திரங்களில் இந்த குழப்பம் உள்ளதாம். தேவர் உலகில் பல விஷ்ணுக்கள், (பல இந்திரன்கள் போல) இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது கதைதானே, ரசித்து, விட்டுவிடுவோம்)

1 comment:

  1. விஷ்ணு ஒன்றும் உன்னை போல் காம கம்மனாட்டி கிடையாது \
    சிவன் பிரம்மா எல்லாம் பெருமாள் முன்னாடி மூத்திரம் போகும் அருவெறுப்பான ஜென்மங்கள்
    நீ மூடிக்கிட்டு போடா
    ஜலந்தரன் எல்லாம் விஷ்ணுவுக்கு ஒரு மயிரும் கிடையாது

    ReplyDelete