கந்தபுராணம்:
ஆறுமுகக் கடவுளைப்பற்றி மிக விரிவாக வடமொழியில் கூறப்பட்டுள்ள நூல் இந்த கந்தபுராணம். இதை வடமொழியில் உருவாக்கியவர் வியாசர். இந்த வடமொழி கந்தபுராணம் மொத்தம் ஒரு லட்சம் கிரந்தங்களை (பாடல்கள்) உடையது.
சுப்பிரமணியக் கடவுள் இதை தமிழில் உருவாக்க நினைத்து, காஞ்சிபுரத்து குமரகோட்ட அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியாரின் மூலம் தமிழில் பாடப்பெற்றது. தமிழில் உள்ள கந்தபுராணம் மொத்தம் 12,000 பாடல்களை கொண்டது. இது மொத்த வடமொழி கந்தபுராணப் பாடல்களை பாடவில்லை. அதற்குப்பதிலாக, வடமொழியில் உள்ள கந்தபுராணத்தில் ஒரே ஒரு பாகமாகிய "சங்கரசங்கிதை" என்ற பகுதியை மட்டும் தமிழில் பாடியுள்ளார் இந்த கச்சியப்ப சிவாச்சாரியார். இதில் மட்டுமே, வரலாற்று கதைகளோடு தத்துங்களையும் எடுத்துச் சொல்லியிருப்பார்களாம்.
No comments:
Post a Comment