Friday, July 31, 2015

பிஞ்சாய் பழுத்த...

அன்னமே! மானே! ஆழ்வார் திருமகளே!
வேதங்க லோதி வென்றுவந்த வாழ்வார்க்குச்
சீதைபோல வந்த திருமகளைச் சொன்னாரார்
முத்தே! பவளமே! மோகனமே! பூங்கிளியே!
வித்தே! விளக்கொளியே! வேதமே தாலேலோ!

பாமாலை யிட்டீர் பரமர்க்கு யென்னாளும்
பூமாலை சூட்டப் புகழ்ந்தளித்த தெள்ளமுதோ!
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்தப்
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ!
எந்தைதந்தை யென்று யியம்பும்பெரி யாழ்வார்க்கு

வந்துவிடாய் தீர்த்தாய் மாதேநீ தாலேலோ!
பொய்கைமுத லாழ்வார்க்குப் பூமகளாய் வந்துதித்த
மைவிழி சோதி மரகதமே! தாலேலோ!
உலகளந்த மாய னுகந்து மணம்புணர
தேவாதி தேவர்கள் தெளிந்தெடுத்த தெள்ளமுதோ!

(கோதைநாச்சியார் தாலாட்டு)

No comments:

Post a Comment