அயோத்தி:
ஒரு காலத்திலிருந்து கோசல நாட்டுக்கு இதுதான் தலைநகரமாம். தலைநகரத்தை பழைய காலத்தில் "ராஜதானி" என்று குறிப்பிட்டார்கள். இந்த அயோத்தி சராயு நதி கரையில் உள்ளதாம். இந்த அயோத்தி தலைநகரைச் சுற்றி மிகப் பெரிய மதில் சுவர்கள் இருந்ததாம். அந்த மதில் சுவர்களில் பலதரப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்குமாம். எதிரிகள் எளிதில் நெருங்கிவிட முடியாதாம்.
அந்தக் காலத்தில், இந்த பூமியில் மொத்தம் ஏழு நகரங்கள் மிகப் புகழ்பெற்ற நகரங்களாக இருந்ததாம். நகரம் என்றால் "புரி" என்று அதற்கு பொருள்போல. இந்த ஏழு நகரங்களுக்கும் ஏழுபுரி அல்லது சப்தபுரி என்று பெயர். ரோமாபுரியும், இலங்காபுரியும், இதில் சேர்ந்ததுதானாம். இவை எல்லாம் ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கும் நகரங்கள் என்று கூடச் சொல்வார்கள்.
No comments:
Post a Comment