கவிக்காம நாயனார்
இவர் சூலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம். (சூலை நோய் என்றால் என்ன தெரியவில்லை). மிக வருத்தப்பட்டாராம். பரமசிவன் இவருக்கு கனவில் வந்தாராம். நீ, சுந்தரமூர்த்தியைப் போய் பார் தீரும் என்று கனவில் சொன்னாராம்.
இவரும் சுந்தரமூர்த்தியிடம் போயிருக்கிறார். ஆனால் அவரோ, யாரோ ஒரு பரத்தையிடம் தூது அனுப்பி இருக்கிறார். (அந்த பரத்தை அவரின் காதலியோ, விபச்சாரியோ தெரியவில்லை).
கவிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. தன் வாளை உருவி (கவி, கத்தி வைத்திருப்போரோ) இந்த இழி செயலை செய்வதற்கு, நானே என் நோயைப் போக்கிக் கொள்வேன் என்று சொல்லி வயிற்றில் குத்திவிட்டாராம். (அப்படியென்றால், சூலை நோய் என்பது வயிற்று வலியாக இருக்குமோ?). பரமசிவன் சும்மா இருப்பானா? உடனே தோன்றி கவியை காப்பாற்றி விட்டாராம்.
பின்பு இந்த கவியும் சுந்தரமூர்த்தியும் நண்பர்கள் ஆனார்களாம். எதுக்கு பரத்தையிடம் அனுப்பினாய் என்று பின்னாளில் கேட்காமலா இருந்திருப்பார்?
No comments:
Post a Comment