Monday, July 27, 2015

அயோனிசை

அயோனிசை:
சீதைக்கு மற்றொரு பெயராம். பொதுவாக கடவுள்கள் இந்த பூமியில் பிறக்கும்போது மனிதர்கள் வயிற்றில் பிறப்பதில்லை. ஒருவேளை அதை கேவலம் என்று நினைப்பார்கள் போல. ஆம், ஆணும் பெண்ணும் கலந்து பிறப்புகளை உருவாக்கி அதில் பிறந்தால் அவன்/அவள் மனிதன். ஆனால் கடவுள்கள் அவ்வாறு மனித இனத்தில் கலக்க முடியாது போல. எனவே இவர்களின் பிறப்பு எல்லாம் வேறு மாதிரி வேடிக்கையாகவும் வினோதமாகவும் விஞ்ஞானத்துக்கு எதிராகவும் இருக்கும். 

அப்படித்தான் சீதையின் பிறப்பும் இருக்கிறது. ஜனக மன்னரின் மகள் சீதை என்று சொல்லிக் கொண்டாலும், உண்மையில் சீதை, ஜனக மன்னரின் மகளில்லை. எடுத்து வளர்த்த மகள்தான். ஜனகருக்கு குழந்தையில்லையாம். ராஜாக்களுக்கு குழந்தையில்லை என்றால், முனிவர்கள் வந்து "புத்திரகாமேஷ்டி யாகம்" என்ற யாகத்தை செய்வார்கள். அதை செய்தபின்னர் குழந்தைகள் பிறக்குமாம். அவ்வாறு பிறந்திருக்கிறதுபோல. இந்த ஜனக மன்னரும் இந்த புத்திரகாமேஷ்டி யாகத்தை செய்கிறார். 

இந்த யாகம் செய்து முடித்தவுடன், ஒரு "தங்க கொழு" அதை கலப்பையில் கட்டி நிலத்தை உழுவேண்டுமாம். ஜனக மன்னர் அப்படி உழுதபோது அந்த மண்ணிலிருந்து எழுந்தவள்தான் சீதை என்னும் குழந்தை. அந்த குழந்தையைதான் எடுத்து வளர்த்து ஸ்ரீராமருக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். அயோனிசை என்பதற்கு பொருள், யோனி என்றால் மனிதர்களின் பிறப்பு உருப்புகள். அயோனி என்றால் அவ்வாறான மனித பிறப்பு உருப்புகள் அல்லாத என்று பொருள். மனிதர் மூலம் பிறக்காத பெண் என்று பொருளாம். 

கிரேக்க இதிகாசத்தில்கூட இப்படி, கடவுள்கள் யாரும் மனிதருக்கு பிறப்பதில்லை. மேல்உலக தேவர்களுக்கே பிறந்தவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. 

1 comment: