ககுதிமி
இவர் தன் மகள் ரேவதிக்கு தகுந்த மணமகனை தேடி அலைகிறார். தேடித்தேடி பிரம்மனுடைய சபைக்கு வருகிறார். (அப்ப, பூமியில் அலையலையா, சொர்க்கலோகத்தில் அலைந்தாரோ?) பிரம்மன் சபையில் ஆடல் பாடல்கள் எல்லாம் தூள். (ஐந்து இல்லையில்லை 10 நட்சத்திர ஓட்டலாக இருக்குமோ).
மகளுக்கு மணமகன் பார்க்க போனவர் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டார். மனம் அதிலேயே இருந்து விட்டது. சொர்க்கத்தில் நேரம் போவது, நாள் போவது, மாதம் போவது தெரியாதாம். அதுபோல இவருக்கும் வருடக் கணக்காகிவிட்டது தெரியவில்லை. அவர் எவ்வளவு காலம் பிரம்மனின் சபையில் இருந்திருக்கிறார் என்றால், இந்த பூமியின் கணக்குக்குப்படி 27 சதுர் யுகங்களாம். (கணக்கு தெரியவில்லை, ஆனால் எத்தனையோ லட்சம் வருடங்கள் ஆகிவிட்டன).
அப்புறம் ரேவதிக்கு என்ன ஆனது? தூக்கத்தில் விழித்த மாதிரி எழுந்து பிரம்மனிடம் கேட்டிருக்கிறார். அவர் சாவகாசமாகச் சொல்லி இருக்கிறார், "நீ இப்போது பூமிக்கு போனால், உன்னுடன் வாழ்ந்தவர்கள் யாரும் அங்கு இருக்க மாட்டார்கள். அவர்களின் பல தலைமுறை ஆட்கள்தான் இருப்பார்கள். அவர்களை உனக்கு தெரியாது. இங்கிருந்து (சொர்க்கத்திலிருந்து) இப்போது பலராமர் என்று ஒருவர் போய் இருக்கிறார். இப்போதுதான் பிறந்திருக்கிறார். அவருக்கு உன் மகளைக் கொடு என்றாராம்.
அப்படியென்றால் ரேவதிக்கு அதுவரை திருமணம் ஆகாமல் இருந்ததா? அவர் எப்படி யுகம் யுகமாக உயிருடன் இருக்க முடியும்? இந்த சந்தேகம் எனக்கும்தான் வந்தது. மணமகனை தேடிப் போகும்போது, மகளுக்கு பிடிக்கவேண்டுமே என்று கையோடு மகளையும் கூட்டிக் கொண்டுதான் பிரம்மனின் சபைக்கு போனாராம். அடப்பாவி. அந்த பெண்ணும் ஆட்டம் பாட்டத்தில் லயித்து இருந்துவிட்டாதா? நல்ல தந்தையும் மகளும்.
No comments:
Post a Comment