ஆதிசேஷன்:
பெரிய பாம்பு இந்த பூமியைத் தாங்கிக் கொண்டிருப்பதுபோல பல படங்களை பார்த்திருக்கிறோம்.
இந்த ஆதிசேஷன், கசியபிரசாபதி என்பவருக்கும் அவர் மனைவி கந்துருவைக்கும் பிறந்த மகன். மூத்த மகனாம். இந்த கந்துருவை, அவளின் சக்களத்தியான விநதைக்கு மிகக் கொடிய கொடுமைகள் செய்தாளாம். (போட்டியில் தோற்ற விநதை, இந்த கந்துருவைக்கு அடிமையாக சில காலம் வாழ்ந்தாள்). இதைப்பார்த்த கந்துருவை மூத்த மகனான இந்த ஆதிசேஷன் மிகவும் வருத்தப்பட்டான். தன் தாயின் அந்த பாவத்தை போக்கவேண்டி, தவத்தை செய்து வந்தானாம். பிரம்மா அவன் தவத்தை பாராட்டி, அதன் பலனாக இந்த பூமியின் பாரத்தை தாங்கிபிடித்துவரும்படி அருளை வழங்கினாராம். இவனின் தவத்தை மெச்சிய விஷ்ணு ஆதிசேஷனை ஆயிரம் தலைகளையுடைய பாம்பாக (ஆதிசேஷனாக) மாற்றி எல்லா பாம்புகளுக்கும் ராஜாவாக ஆக்கி இருக்கிறார். அதனால்தான், விஷ்ணுவும் பாற்கடலில் இந்த ஆதிஷேசனின் மேல்தான் படுத்திருக்கிறாரோ!
No comments:
Post a Comment