Tuesday, July 28, 2015

மேரு

மேரு:
பூமியின் வடதுருவத்தை சுமேரு அல்லது மேரு என்று சொல்கிறார்கள்;
பூமியின் தென்துருவத்தை குமேரு என்று சொல்கிறார்கள்;

இந்த மேரு பகுதியான வடதுருவத்தில் இருப்பவர்களுக்கு உத்தராயண காலமான ஆறு மாதங்களும் பகலாகவே இருக்கும்; அதேபோல தட்சிணாயண காலமாகிய ஆறுமாதங்களும் இரவாகவே இருக்கும்;  

இந்த மேரு பகுதியான வடதுருவத்தின் மகள்தான் மேனகையாம். 
இந்த பூமியின் தென்துருவத்திலிருந்து வடதுருவம் வரை பூமிக்கு உள்ளேயே வளர்ந்து வெளியே முளைத்திருக்கும் நீண்ட மலைப்பகுதியே மேரு என்றும் சொல்கிறார்கள்.

மேருவின் சிகரம்தான் சுமேரு என்றும் சொல்கிறார்கள். இது வடக்கே உள்ள மேரு மலையின் சிகரம். இந்த சிகரமானது துருவ நட்சத்திரத்தை நோக்கி இருக்குமாம். மேரு என்பது சுமேரு மலையின் உச்சி. மேரு மலையில் வால்பகுதிதான் பூமியின் தெற்குப் பகுதியான குமேரு. (சுமேரு வடமுனை; குமேரு தென்முனை); 

பூமியை இரண்டு பிரிவாக பிரித்துள்ளனர். ஒன்று: ஊர்த்துவ கபாலம் என்றும் மற்றொன்றை: அத கபாலம் என்றும் பிரித்துள்ளார்கள். ஊர்த்துவ கபாலம் முழுவதும் நிலப்பகுதியாம். அத கபாலம் முழுவதும் நீர் (கடல்) பகுதியாம். 
சுமேரு என்ற பகுதி இளாவிருது வருஷத்துக்கு (நிலத்துக்கு) நடுவில் உள்ளதாம். இந்த மேருவுக்கு மனிதர்கள் செல்ல முடியாதாம். (வடபகுதிக்கு). 
பூமியை 9 பிரிவாக பிரித்துள்ளனர். அதை நவகண்டம் என்கிறார்கள். 

இதிகாசத்தில், பிரியவிரதனுக்கு அவன் மனைவி சுகன்யகை மூலம் பிறந்தவர்கள் மொத்தம் 11 மகன்கள். 
இவர்கள் இந்த பூமியின் கண்டங்களை பிரித்துக் கொண்ட விபரம் சொல்லப்பட்டுள்ளது. பூமியையே பங்கு வைத்துக் கொண்டார்களா? 

நாபிக்கு = இமயத்தின் தெற்கிலுள்ள பரத கண்டம்;
கிம்புருஷனுக்கு = பரத கண்டத்துக்கு வடக்கேயுள்ள ஏமகூட பர்வதத்தின் தெற்கேயுள்ள கண்டம்;
அரிக்கு = ஏமகூடத்தின் வடக்கேயுள்ள நிஷதபர்வதம்:
இலாவிருதனுக்கு = நிஷத பர்வதத்துக்கு வடக்கே மேருவை நடுவே கொண்ட இலாவிருத கண்டம்;
ரம்மியனுக்கு = இலாவிருதத்துக்கும் நீலாசலத்தும் நடுவேயுள்ள கண்டமும்;
இரணவந்தனுக்கு = ரம்மிய கண்டத்துக்கு வடக்கேயுள்ள சுவேதபர்வதத்துக்கு இந்தப்பக்கமுள்ள கண்டமும்;
குருவுக்கு = சுவேதபர்வதத்துக்கு வடக்கே சிருங்கவந்தத்தாலே சூழப்பட்ட கண்டமும்;
பத்திராசுவனுக்கு = மேருவுக்கு கீழ்திசையில் கண்டமும்;
கேதுமாலனுக்கு = மேருவுக்கு மேற்கிலுள்ள கண்டமும்;
சம்புதீவை = மீதியுள்ள இரண்டு மகன்களான பார்வசித்தை, பிரியவிரதன் எடுத்துக் கொண்டனராம். 

இதையெல்லாம், பூமியை ஒரு படம் வரைந்து அதை வைத்துக் கொண்டு இந்த பகுதியை பிரித்துப் பார்த்தால்தான் தெளிவாக விளங்கும் போல!

No comments:

Post a Comment