Saturday, August 29, 2015

திருப்பனந்தாள்

திருப்பனந்தாள்:

காவிரியின் வடகரையில் உள்ள சிவஸ்தலம் இந்த திருப்பனந்தாள்.

இதற்கு ஒரு கதை உண்டு.

ஒரு சிவபக்தை, தான் தொடுத்த மாலையை சிவனுக்கு அணிவிக்க வருகிறாள். அவள் அந்த மாலையை சிவனின் கழுத்தில் போட முயற்சிக்கும்போது, அவளின் ஆடை நழுவுகிறது. இரண்டு கைகளும் மாலையைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. மாலையை கீழே விழுக விடமுடியாது. ஆனாலும் அவளின் ஆடை நழுவுகிறது. அதை பிடிக்க வேறு கைகள் இல்லை. 

தன் முழங்கைகளைக் கொண்டு ஆடையை இறுக்கிக் கொண்டே, அந்த மாலையை இறைவனுக்கு சாத்த முயற்சிக்கிறாள். அவளால் கைகளை தூக்கி மாலையை இறைவனின் கழுத்தில் போட முடியவில்லை. 

இந்த இம்சையைப் பார்த்த சிவன், தன் கழுத்தை குனிந்து அவள் கைகள் இருக்கும் இடம் வரை குனிந்து அந்த மாலையை ஏற்றுக் கொண்டானாம். 
 

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி:

காவிரியின் கரையில் உள்ள ஒரு சிவஸ்தலம். 

இதற்கு ஒரு கதை உண்டு;
தனகுப்தன் என்பவனின் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். பிரசவ வலி வந்து விட்டது. காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. கர்ப்பிணியின் தாய் இவளுக்கு பிரசவம் பார்க்க அவள் ஊரிலிருந்து மகளின் ஊருக்கு வருகிறாள். நடுவில் காவிரி ஆறு கரைபுரண்டு ஒடுகிறது. அக்கரையில் நின்றுகொண்டு தவிக்கிறாள். தாயால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. மகளுக்கு பிரசவம் நெருங்கிவிட்டது. 

சிவபெருமான், அந்த தாயின் உருவம் போல உருமாறி, அக்கரைக்குச் சென்று அந்த பெண்ணுக்கு அவளின் தாய்போலவே இருந்து பிரசவத்தில் உதவி வேலை பார்க்கிறார் சிவன். 

அதனால்தான், அந்தச் சிவனுக்கு பெயர் "தாயுமானவன்". 

  

திருக்கோகர்ணம்

திருக்கோகர்ணம்:

சிவபக்தனான இராவணன், சிவனின் இருப்பிடமான கைலாசம் சென்று, சிவனைக் கெஞ்சி அவனிடமிருந்து சிவலிங்கத்தைப் பெற்று அதை பூஜித்து வந்தான். அந்த லிங்கத்தை கீழே வைக்காமல் அதற்கு பூஜைகள் செய்து வந்திருக்கிறான். 

ஒருநாள், அவன் குளிக்கச் செல்லும்போது, அதை ஒரு அந்தணன் கையில் கொடுத்து கீழே வைக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு குளிக்கச் செல்கிறான். அந்த அந்தணன்தான் விநாயகர். விநாயகர் மாறுவேட்டதில் அந்தணன்போல வந்திருக்கிறார். 

விநாயகர் அந்த லிங்கத்தை தரையில் வைத்துவிடுகிறார். திரும்பவந்து பார்த்த இராவணன், அதை கையில் எடுக்கிறான், முடியவில்லை. தன் இருபது கைகளாலும் பலம் கொண்டமட்டும் இழுத்துப் பார்க்கிறான், முடியவில்லை. 

அந்த லிங்கமானது, பசுவின் காதுமடலில் இருக்கும் வளையம்போல, வேர்விட்டு பூமிக்கு அடியில் நன்றாக புதைந்துவிட்டது. அதை இழுக்க முடியாமல், இவ்வளவு பலம் எப்படி வந்தது என்று திகைத்து விட்டுவிடுகிறான். 

கோ என்றால் பசு, அந்த பசுவின் காதுமடல் கர்ணம் போல சுற்றி வேர்விட்டு இருந்த லிங்கம் என்பதால், இதை "கோ-கர்ணம்" என்று அழைக்கின்றனர்.    

திரியம்பகம்

திரியம்பகம்
இது ஒரு வில். 
வீரபத்திரர், தக்கன் யாகத்தை அழிப்பதற்காக எடுத்த வில் இது.

இந்த வில்தான் மண்ணில் புதைந்து கிடந்தது. அதில் சீதையும் இருந்தார்.  
சீதையின் தந்தை யாகம் செய்து ஏர் உழும்போது இந்த வில்லும் சீதையும் கிடைத்தனர். 
பின்னர் இந்த வில்லை உடைத்துத்தான் இராமன், சீதையை மணம் புரிந்தார்.   

இராமேஸ்வரம்


இராமேஸ்வரம்

இதை திரு இராமேச்சரம் என்றும் சொல்வர். 
இந்தியாவின் தென்கோடியில் உள்ளது. 
ஸ்ரீராமர், லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கிய இடம் இந்த இராமேச்சரம். 

இங்குள்ள சுவாமியின் பெயர் இராமநாதர் (சிவன்=இராமனின் நாதன்). 
அம்மை பர்வதவர்த்தனி. 

இமயமலை வரை உள்ள மக்கள் அங்குள்ள கங்கை நதியின் தீர்த்தத்தைக் கொண்டுவந்து இங்குள்ள சிவலிங்கத்துக்கு தினமும் அபிஷேகம் செய்கிறார்கள். 

வால்மீகி இராமாயணத்தில் இந்த இராமேஸ்வரத்தை சிறப்பாக எடுத்துக் கூறிஉள்ளாராம்.

திருக்கஞ்சனூர்


திருக்கஞ்சனூர்

இது காவிரிக் கரையில் உள்ள சிவஸ்தலம். 

ஒரு மணப்பெண், மணக்கோலம் பூண்டு, அழகிய கூந்தலுடன் மணமேடைக்கு வருகிறாள். அப்போது சிவன் மறுவேடத்தில் வந்து அந்தப் பெண்ணின் கூந்தலைக் கேட்கிறாள். ஏதும் கூறாமல், அவளின் தந்தை, அவளின் அழகிய கூந்தலை கொய்து (அறுத்து) கொடுத்தார். அவளின் தந்தையின் பெயர் மானக்கஞ்சாற நாயனார். 

இந்த சிவஸ்தலத்தில்தான், ஹரதத்தாசாரியார் பிறந்தார். 
இந்த ஹரதத்தாசாரியார்தான் பழுக்க காய்ச்சிய இருப்புப்படிகளில் ஏறி சிவனை தரிசித்தவர். 

இந்த சிவன் அக்கினி ரூபத்தில் இருப்பவர். 
இங்குள்ள அம்மை "கற்பகநாயகி" என்னும் பெயர் கொண்டவள்.   

திருக்கடிக்குளம்

திருக்கடிக்குளம்

கற்பகவிநாயகர், சிவனிடமிருந்து மாங்கனி பெற்ற ஸ்தலம் இதுதான். காவிரிக் கரையில் உள்ளது. 

இது சிவஸ்தலம். இங்குள்ள சுவாமியின் பெயர் "கற்பகேஸ்வரர்". 
அம்மையின் பெயர் "சௌந்தரநாயகி".

      

திருக்கருவூர் திருவாநிலை


திருக்கருவூர் திருவாநிலை

பிரம்மா சிருஷ்டி வேலையைச் செய்யாமல் இருந்துபோது, காமதேனு என்னும் பசு, சிவனை வழிபட்டு அந்த சிருஷ்டி அதிகாரத்தை எடுத்துக் கொண்டு சிருஷ்டி என்னும் மானிடப் பிறப்பை பெருகச் செய்தது. ஆ என்னும் பசுவான இந்த காமதேனு இந்தச் சிருஷ்டி வேலையைச் செய்ததால் இது திருஆநிலை = திருவாநிலை என்று பெயர் பெற்றதாம்.

இது கொங்கு நாட்டிலுள்ள சிவஸ்தலம். கரூர் என்றும் பெயர். 

இங்குள்ள சிவனின் பெயர் "பசுபதீஸ்வரர்". அம்மையின் பெயர் "கிருபாநாயகி". 

கருவூர்தேவர் இங்குதான் இருந்தார். அவர் சிவயோகமும் அணிமா சித்திகளும் நிரம்ப பெற்றவர். அவர், நினைத்தால், மழைபொழியும், வெயில் நீங்கும். இதுபோன்ற பல அற்புதங்களை செய்தவர் இந்த கருவூர்த் தேவர்.

திருக்கழுகுக்குன்றம்

திருக்கழுகுக்குன்றம்

இது ஒரு சிவஸ்தலம். 

சிவனின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசிய இரு துறவிகளும் கழுகாய் உருவம்மாறி இங்கு இருந்து கொண்டு சிவனை வழிபட்டு வருகின்றனர். 

மாணிக்கவாசகருக்கு குருவடிவம் காட்டிய இடமும் இதுவே. "காட்டினாய் கழுக்குன்றினிலே" என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடும் இடம் இதைத்தான். 

இங்கிருக்கும் சிவனின் பெயர் "வேதகிரீஸ்வரர்". அம்மையின் பெயர் "பெண்ணினல்லாள்".

திருக்குடமூக்கு

திருக்குடமூக்கு


இதுவே கும்பகோணம். ஒரு சிவஸ்தலம். இங்கே ஒரு தீர்த்தம் உள்ளது. அதன் பெயர் "மாமக தீர்த்தம்". 



ஒரு முனிவர், தன் தாயின் அஸ்தியை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு தீர்த்தமாக நீராடி வருகிறார். அப்படி வரும்போது, இந்த மாமக தீர்த்தத்தில் வந்து, தன் தாயின் அஸ்தியை கரையில் வைத்துவிட்டு, தீர்த்தத்தில் நீராடுகிறார். முடித்து வந்து, அஸ்தியைப் பார்க்கிறார். அந்த எலும்பு சாம்பல், உருமாறி தாமரை மலர்களாக இருக்கிறது. 

இங்குள்ள சிவனின் பெயர் "கும்பேஸ்வரர்". அம்மையின் பெயர் "மங்களநாயகி". 

        

Friday, August 28, 2015

ஆதியின் மூலமான ஐங்கரன்....

ஆதிசங்கரரின் ஆயுட்பாவகம்

ஓதிய பெரியோர் வாக்கா லுரைத்திடும் நூல்க டன்னை
மேதினி தனிலே நன்றாய் விளங்கிடச் செய்யு ளாகச்
சோதிடப் பலன்க ளெல்லாம் தொகுத்துயான் விளம்பு தற்கு
ஆதியின் மூல மான வைங்கரன் காப்ப தாமே.

செங்கண்மா லருளி னாலே செகந்தனில் மனுவுக் கெல்லாம்ய
இங்கித மாக நல்ல சோதிட மியம்ப வேண்டித்
திங்களின் நிறத்தை யொத்த தேவியாய் வந்து தித்த
பங்கய முகத்தான் பால சரஸ்வதி பாதங் காப்பாம்.

(ஆதிசங்கரர் அருளிய ஆயுட்பாவகம் -- கடவுள் வணக்கத்தின் பாடல்கள்)

கீற்றைப் புனைந்த

கந்தரலங்காரம்

பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னை ப்ரபஞ்சமென்னுஞ்  
சேற்றைக் கழியவழிவிட்டவா செஞ்சடாடவிமே
லாற்றைப் பணியை பிதழியைத் தும்பையையம்புலியின் 
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.

பாஞ்சாலியின் கோபம் (புருஷன் மீது)--2

"பிராணநாதா! மேனாள் இந்திரப் பிரத்தத்தில் வெளியதுடீ (வெள்ளை உடையணிந்து) இக் கலவைச் சாந்தணிந்து உல்லாசமாயிருந்த மறலியன்ன மாற்றரு மொய்ம்பனாம் இவ் வீமன், இஞ்ஞான்று கால்நொந்து, குருதி பெருக்க் கல்லிலும் முள்ளிலும் நடந்து, உடல் முழுதும் தூசு படிந்து, மாசடைந்த மேனியனாய் இருத்தலைக் கண்டும் நுமக்கு மானம் பிறக்கவில்லையோ?

ஆருயிர்த் தலைவ! நீவிர் இராசசூயம் (யாகம்) வேட்ட அன்று மாதிரம் அனைத்தும் சென்று குடைந்து பொன், வெள்ளி முதலாம் திரவியங்களைக் குவியல் குவியலாகக் கொணர்ந்து குவித்த இவ் விசயன் (அர்ச்சுனன்), இதுகாலை, உடுக்க உடையின்றி மரவுரி உடுத்து மண்ணிற் கிடந்து உழலும் அலங்கோலத்தைக் கண்டேனும் நும்மைச் சினம் சுமாட்டாதோ? 

இன்னுயிர்த் துணைவ! இடும்பையறியா இயல்பினரான நகுல சகாதேவர்கள், இப்போது கல்லும்  முள்ளும் செறிந்த கரடுமுரடான நிலங்களிற் துயின்று துன்பமுறுவதைக் கண்டும் நும் நெஞ்சம் இளகாதோ? 

இவர்களின் இத் துயர்நிலை கண்டு என் நெஞ்சம் தீமுகத்திட்ட மெழுகென உருகுகின்றதே காற்றத்திடைப்பட்ட கலவர் (மாலுமிகள்) மனம்போலக் கலங்குகிறதே? நுமதி நெஞ்சம் இவையிற்றை எல்லாம் பொறுத்திருப்பது யாது பற்றியோ? மக்களுடைய சித்த விருத்திகள் பலதிறப்பட்டனவேனும் நுமது உள்ளக்கிடக்கை உணர்தற்கு அரியதாகின்றது. 

ஆருயிர்த துணைவ! மேனாள் அன்னத்தின் தூவி (இறகு) பரப்பிய மென்பூஞ் சேக்கையில் படுத்துக் கண்படைகொண்டு வைகளையில் வந்திமாகதர் வாழ்த்துப்பாடத் துயிலெழும் நீவிர், இன்று கூரிய தருப்பைப் புற்களிற் படுத்துத் துயில் கொண்டு நரிகளின் ஊளைச் சத்தம் கேட்ட பின்னரன்றோ கண்விழிக்கின்றீர். இதனை யான் எவ்வாறு சகிப்பேன்? 

பண்டு எவ்வுயிரிடத்தும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அந்தணர்க்கு முதல் அமுது படைத்துப் பின்னர் அவர் உண்டு ஒழிந்த மிச்சிலை மிசைவதே நுமது வழக்கமாயிருந்தது. அதனால் நும் யாக்கையும் (உடம்பும்) பொலிவுற்று விளங்கியது. புகழும் ஓங்கிப் பரவியது. இஞ்ஞான்று, கானகத்தில் காய் கனி கிழங்கு முதலியன உண்டு நும் திருமேனியும் மெலிவுற்றது. நல்லிசையும் நலிவுற்றது. இதனைக் காணுந்தோறும் என் மனம் படும் பாட்டைப் பகருவது எங்ஙனம்? 

நீவிர் முன்பு அரியேறு சுமந்த மணியாதனத்துத் திருவோலக்கங் கொண்டிருக்கும் பொழுது நவமணி குயிற்றிய முடிகளால் அலங்கரிக்கப்பட்டு விளங்கும் நுஞ் சேவடிகள், இப்போது புல்வாய் முதலிய விலங்குகள் கடித்ததுபோக எஞ்சி நின்ற கூரிய தருப்பைப் தாள்களிலன்றோ நடந்து நடந்து வருத்தமுறுகின்றன. இதனையும் என் மனம் எவ்வாறு பொறுக்கும்? மன்பதை மாட்டு இன்ப துன்பங்கள் சகடக்கால் போல (வண்டிச் சக்கரம் போல) மாறி மாறி வருமெனினும், தெய்வீகமான இன்னல்களைப் பொறுப்பதன்றி மனிதரான் வரும் அவையிற்றைக் களைய முயலாது பொறுத்தல் சீரியதன்று. 


இன்னுயிர் நாயக! இதுகாறும் நீவிர் பொறுமையை மேற்கொண்டது போதும் போதும். இனியேனும் பகை கடப்பதற்கான உபாயங்களை ஒல்லும் வகை முயன்று சிந்தித்தல் வேண்டும். பொறுமையால் வெல்லுபவர், உலகை முனிந்த முனிவரன்றி, உலகைப் புரக்கும் புரவலர் அல்ல. கூரிய பகழிகளை ஏவிப் பகைவரைக் கொன்று குவிக்கும், பேராண்மை மிகுந்த நும்போலியர் பொறுமையை மேற்கொண்டால் ஆண்மையென்பது யாரிடம் போய்ச் சரண் அடையும். பொறுமையாற்றான் இம் மண்ணுலகிங் மாந்தர் சுகம்பெறுவர் என்னும் குருட்டெண்ணத்தைக் கைக்கொண்டு காலத்தைக் கொன்னே கழிப்பீராயின், 

நுந்தோளிலிருக்கும் வில்லை முறித்தெறித்து சடைமுடிதரித்து அரசு வேண்டாமெனச் சூளுரைத்து அங்கி வளர்த்து, வேள்வி வேட்டு நுங் காலத்தைக் கழியாநிற்பீர். குறித்த அவதிக்கு இடையில் சினந்து போருக்கு எழுதல் நுமது பொய்யாத வாய்மைக்குப் பொருந்தாது என்று மனங்க கலங்க வேண்டாம். காட்டிடை வசதியும் எம்மாட்டு என்றும் தீங்கிழைக்கச் சமநம் பார்த்திருக்கும் கொடிய துரியோதனன்பால் அதனைக் காக்க ஏன் முயல வேண்டும்? பெரும! நீவிர் போர் தொடங்கிய அன்றே எமது தாழ்வும் ஒழியும். 

நல்வாழ்வும் பெருகும். மாலையில் மேலைப்புணரியில் ஆழ்ந்து தளர்ந்த ஞாயிறு மறுநாட் காலையிற் பன்னிறக் கதிர்கொண்டு பல்கிக் குணதிசையில் தோன்றி  இவ்வுலகிற்குப் போதனை செய்யும் பாடம் என்னை? தாழ்ந்தவர் உயர்வர் என்பதன்றோ? மனம் ஒன்றே வேண்டற்பாலது. வெற்றி நுமக்கே. என் சிற்றுரையை இத்துடன் முடிக்கின்றேன். பிழை பொறுத்தருள வேண்டும் எனப் பணிந்து நின்றாள். 

(நன்றி; கிராதார்ச்சுனியத்தை தமிழில் எழுதிய பிரமஸ்ரீ வை. இராமசாமி சர்மா அவர்களுக்கு)

பாஞ்சாலியின் கோபம் (புருஷன் மீது) --1


தர்மனைப் பார்த்து பாஞ்சாலி பேசிய சிற்றுரை;

"என் உயிர்க் காதல! நீவிர் தருமநெறி பிழையா ஒழுக்கமுடையீர். யானோ சின்மதிப் பெண்மை தாங்கி நின்றவள். நும் முன்னர் அரசியல்பற்றி யாதும் பேசத் தகுதியற்றவள். எனினும், மாற்றான் வலியுற்றான் என்று நீவிர் கூறிய மாற்றமே என்னை இரண்டொரு வார்த்தைகள் பேசத் தூண்டிற்று.

உயிர்த்துணைவ! முன்னர் இந்திரனுக்கு இணையான இகல்வேந்தரால் நன்கு பரிபாலிக்கப் பெற்ற இக் குருநாட்டரசு, கடகளிற்றின் கையகத் தகப்பட்ட கமழ் பூமாலை என நும்மாற் கொன்னே சிதைக்கப்பட்டது. நீவிர் அரசை அன்று ஊழ்வலியால் இழந்தீரல்லீர். பகைவன் வாளி கூர்மை யுடைத்து என்று அறிந்தும், இருப்புச்சட்டை தரியாது பராமுகமாயிருந்து வருகிறீர், 'வருமுன் காப்பது நியாமல்லவோ'! வஞ்சகனிடத்தில் வஞ்சகமாக நடவாதவனுக்கு இவ்வுலகில் அவமானம் வந்து எய்துதல் திண்ணம் என்பதை அறியீரோ? இலக்குமி சபலை என்றாலும் (நிலையில்லாதவள்) குணமுள்ள கோமானை ஒருபோதும் விட்டகலுவதில்லையே. 

எழினலங்கொண்ட நும்முயிரன்ன மனையாளை மன்னவையில் மாற்றான் மானபங்கஞ் செய்யப் பார்த்திருந்தும் வாயடக்கி வாளாவிருந்தீரே? நாடோறும் விபத்துக்கள் எங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தும் நீவிர் பொறுதியை மேற்கொண்டது எவண்? நல்குடிப் பிறந்தார் தெய்வத்தால் தமக்கு, ஓர் இழிவு நேர்ந்துழியும் உயிர் வாழாரே. நீவிர் மனிதரால் வந்த இவ்விழிவுக்கு மருந்தாம் வெகுளியை இன்னும் மேற்கொள்ளாதது என்னை? ஒருகால் வெகுளி பொல்லாதது என்று அதனை விட்டொழித்தீரோ? சினம் செல்லுமிடத்து ஒருவன் அதனைச் செலுத்துவதற்குத் தடை என்ன? நீவிர் வெகுளின் உலகமே நடுங்கும். இம் மண்ணுலகத்துள்ள மன்னவர் எவருமே நுமக்கு வயப்படுவார்கள். சினமில்லான் பகையும், நட்பும் ஒரு தன்மைய. அவனை உலகம் சிறு துரும்பு எனவும் மதிப்பதில்லை. இனியேனும் நீவிர் சினங்கொண்டு பகைவர் வலியிழ்க்கத் துணியீரோ?
(நன்றி; கிராதார்ச்சுனியத்தை தமிழில் எழுதிய பிரமஸ்ரீ வை. இராமசாமி சர்மா அவர்களுக்கு)

கிராதார்ச்சுனீயம்

கிராதார்ச்சுனீயம்
வடமொழியின் ஐம்பெரும் காப்பியங்களில் இதுவும் ஒன்று.
வடமொழி ஐம்பெரும் காப்பியங்கள்:
1) நைடதம்
2) இரகுவம்சம்
3) சிசுபாலவதம்
4) குமாரசம்பவம்
5) கிராதார்ச்சுனீயம்
இந்த கிராதார்ச்சுனியத்தை இயற்றியவர் வடமொழி பண்டிதர் பாரவி என்னும் புலவர்.

துவைத வனத்தில் இருந்து தர்மனிடம், துரியோதனின் அரசியலைப்பற்றி ஒந்த காட்டின் வேடுவன் ஏதோ கூறுகிறான். அப்போது அவன் உடன் இருந்தவர்கள் ஏதேதோ கூறி குழப்புகின்றனர். அவர்களுக்கு தர்மன் நீதிகளைச் சொல்கிறான். அப்போது வியாச முனிவர் அங்கு வருகிறார். 

அங்கு வந்த வியாசர், அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதம் பெறுவதற்காக மந்திரத்தை சொல்கிறார். அதைக்கேட்டுக் கொண்டு இமயகிரியை நோக்கிச் செல்கிறான். அவனுக்கு துணையாக இயக்கன் என்பவன் சென்று வழி சொல்கிறான்.

இந்திரகீலத்தில் அர்ச்சுனன் கடும் தவம் புரிகிறான். இந்திரன், அவன் தவத்தை கலைக்க நினைத்து, தேவலோகப் பெண்களை அனுப்புகிறான். அது முடியாமல், இந்திரனே முனிவர் வேடம்தாங்கி வந்து தவத்தை கலக்க நினைத்து அதுவும் முடியாமல் போக, அவனும் ஒரு மந்திரத்தை அர்ச்சுனனுக்கு சொல்லி கொடுத்தவிட்டுப் போகிறான். 

பன்றி உருவத்தில் தோன்றிய மூகன் என்ற அசுரன் அர்ச்சுனன் தவத்தை கலைக்க முயல்கிறான். அதுகண்ட சிவபெருமான் அங்கு வேடம் வேடத்தில் வந்து அந்த பன்றியைக் கொல்கிறார். சிவனுக்கும் அரச்சுனுக்கும் அந்த பன்றியைக் கொன்ற விஷயத்தில் சண்டை நடக்கிறது. பின்னர், சிவன் தான் யார் என்று கூறி, பாசுபதம் கொடுத்தார். இதுவே இந்த கதையாம். 

Friday, August 21, 2015

திராவிட மொழிகள்

திராவிட மொழிகள்
கால்டுவெல் என்ற அறிஞர், "இந்தியாவில் மொத்தம் 12 திராவிட மொழிகள் இருந்தது" என்று கூறி உள்ளாராம்.
ஆனால், மொத்தம் 25 திராவிட மொழிகள் இருக்கிறதாம்.
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
கன்னடம்
கொண்டி
குருக் அல்லது ஒரான்
துளு
கூய்
குவி அல்லது கோந்த்
கோயா
பிராகூய்
மால்டோ
கொடது,
படகா,
கொலாமி,
இருளா,
குறவா,
பார்ஜி,
கொண்டா அல்லது கூயி,
கதபா,
நாய்க்கி,
பெங்கோ,
கொட்டா,
ஒல்லாரி,
தோடா.

எண்ணிக்கை


எண்களில் இரண்டு கை விரல்களும் சேர்ந்து 10ம் இரண்டு கால் விரல்களும் சேர்ந்து ஆக மொத்தம் 12ஐ அடிப்படை எண்களாக ஆங்கிலேயர்கள் கணக்கிட்டிருந்தார்களாம். 

நீளத்தை அளக்க 12 அங்குலம் ஒரு அடியாகவும், எண்ணிக்கை அளவில் 12 பொருள்கள் ஒரு டஜனாகவும், 12 டஜன்கள் ஒரு குரோஸ் ஆகவும் கணக்கிட்டு வந்திருக்கிறார்கள். 

ஒரு பகல் ஒரு இரவுப் பொழுதை 12 மணிகளாகப் பிரித்துள்ளனர். ஒரு வருடத்தை 12 மாதங்களாக பிரித்துள்ளனர். நாணயத்திலும், 12 பென்ஸ் ஒரு சில்லிங்காக கணக்கிட்டுள்ளனர். 

எண்களை எழுத்தால் சொல்லும்போது, ஆங்கிலேயர்கள், 11, 12 என்பதை eleven, twelve என்று சொல்லிவிட்டு அதற்குப் பின் உள்ள எண்களை teen  டீன் என்ற இணைப்பை சேர்த்துக் கொண்டுள்ளனர். 

ஐங்கரற்கும் ஆறு தலை

சங்கரன் என்னும் சிவனுக்கும் ஆறு தலைகள்;

சுப்பிரமணியக் கடவுளான சண்முகத்துக்கும் ஆறுதலைகள்;

ஐங்கரன் என்னும் விநாயகருக்கு ஆறு தலைகள்;

சங்கைக் கையில் பிடித்திருக்கும் விஷ்ணுவுக்கு தலையிலே பாற்கடல் இருக்கிறது;

சிவனுடைய திருவடியைத் துதிப்பவர்களுக்கு மனவருத்தம் தணிப்பதற்கு அதாவது ஆறுதலை தர முடியும் என்று நீ கண்டுகொள்வாயாக!

"சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை
ஐங்கரற்கு மாறுதலை யானவே -- சங்கைப்
பிடித்தோற்கு மாறுதலை பித்தனார் பாதம்
படித்தோர்க்கு மாறுதலை பார்."
(காளமேகப் புலவரின் பாடல்)

களித்தின்று போவென்றேன்

கொடிபோன்ற இடையுடைய தோழிகளே!

நேற்று ராத்திரி நித்திரை செய்யும்போது ஒருவன் வந்து என் கையைப் பிடித்தான். நான் அவன், யாரோ அயலூர் (வெளியூர்) என்று ஐயமுற்றுப் பிடித்த கையை விடு என்றேன்; அவன் விடமாட்டேன் என்றான்; அவன் என்னைத் தணியச் செய்ய (அமைதிப்படுத்த) கஞ்சி குடி என்பது போல கஞ்சிகுடி என்று சொன்னான். 

காஞ்சியில் வசிக்கும் ஏகாம்பரநாதன்தான் என்று நான் தெரிந்துகொண்டு, என்னை சேர்ந்து என்னை சுகித்துப் போ என்று (என்னுடன் இருந்துவிட்டுப்போ என்று) சொல்வதாக களிதின்று போ என்றேன்.

அதைக்கேட்ட அவனோ, தான் கஞ்சிகுடி என்றதற்குப் பதிலாக கேலியாகத்தான் நான் அவனைக் களிதின்று போ என்று சொன்னதாக நினைத்துக் கொண்டு, உடனே மாயாமாய் மறைந்து போய்விட்டான்.

"நேற்றிரா வந்தொரு வனித்திரையிற் கரைபிடித்தான்
வேற்றூரா னென்று விடர்யென்றேன் -- ஆற்றியே
கஞ்சி குடியென்றான் களித்தின்று போவென்றேன்
வஞ்சியரே சென்றான் மறைந்து.'
-- காளமேகப்புலவரின் பாடல்.

தனதன் நல் தோழா

தனதன்நல் தோழா, சங்கரா, சூல
        பாணியே, தாணுவே, சிவனே,
கனகநல் தூணே, கற்பகக் கொழுந்தே,
        கண்கள் மூன்றுடையதோர் கரும்பே,
அனகனே குமர விநாயக கனக
        அம்பலத்து அமரசே கரனே,
உனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
          தொண்டனேன் நுகருமா நுகரே.

குபேரனது நண்பனே, நன்மை செய்யவனே, 
சூலத்தை கையில் ஏந்தியவனே, அழிவற்றவனே, சிவனே, 
நல்ல பொற்தூண்போல் என்னைத் தாங்கிப் பற்றுக் கோடாயிருப்பவனே, 
கற்பகத் தளிரே, மூன்று கண்களையுடைய கரும்பு போன்ற இனியவனே, 
தூய்மையானவனே விநாயகனுக்கும் முருகனுக்கும் தந்தையே, 
பொன்னம்பலத்தில் ஆடும் தேவர் தலைவா, 
தொண்டனாகிய நான் உன் திருவடிகள் இரண்டையும் எனது நெஞ்சினுள்ளே இனிமையாக அனுபவிக்குமாறு நீ திருவருள் புரிவாயாக!

சிக்கமே குடுமி

சிக்கம் என்பது குடுமி, சீப்பு, உறி.

கொக்கு என்பது மாமரம், செந்நாய், கொக்கு, குதிரை, மூல நட்சத்திரம்.

வக்கிரம் என்பது கொடுமை, மீளுதல், மடங்குதல், வட்டம்.

சக்கிரி என்பது குயவன், செக்கான், அரசன், திருமால், பாம்பு என்றும் பெயர்கள் உண்டு.

"சிக்கமேகுடுமி நாமஞ் சீப்புடனுறியுமேற்கும்
கொக்குமாமரமே செந்நாய் குரண்டமே குதிரைமூலம்
வக்கிரங்கொடுமை மீளன் மடங்குதலுடனே வட்டம்
சக்கிரி குயவன் செக்கான் றாராபதி நெடுமால்பாம்பு."

பாகலே காரவல்லி

சாகம் என்றால் சாகினி என்னும் சிறுகீரை, வெள்ளாடு, தேக்குமரம்.

பாகல் என்றால் காரவல்லி என்னும் பாகற்கொடி, பலாமரம்.

யூகம் என்றால் கருங்குரங்கு, உட்பொருள் அறிதல், தர்க்கம்.

நாகம் என்றால் ஆகாயம், குரங்கு, புன்னைமரம், நல்ல தூசு என்னும் நல்ல ஆடை, மலை, பாம்பு, யானை என்றும் பெயர் உண்டு.


"சாகஞ்சாகினி வெள்ளாடு தேக்கெனுந் தருவுமாமே
பாகலே காரவல்லி பலாவென்று பகரலாமே
யூகமே கருங்குரங்கோடுட் பொருளுணர் தறர்க்கம்
நாகம் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பியானை."

ஆகுவே எலியினமாம்

ஆகு என்றால் எலி, பெருச்சாளி.

யோகம் என்றால் தியானம், கூட்டம், உபாயம், உயர்ச்சி;

போகி என்றால் இந்திரன்,பாம்பு.

போகில் என்றால் பறவைகளின் பொதுப்பெயர், பூவரும்பு.

கோகிலம் என்றால் குயில், பல்லி.

குடங்கர் என்றால் குடிசை, குடம்.

"ஆகுவேயெலியினமாம் பெருச்சாளிக்கும்பேர்
யோகமே தியானங்கூட்டமுபாயமாமுயர்ச்சிக்கும்பேர்
போகியிந்திரன் பாம்பென்ப போகில் புட்பொதுப்பூமொட்டாம்
கோகிலங்குயில் பல்லிப்பேர் குடங்கரே குடிசைகும்பம்.

Tuesday, August 18, 2015

ஆறாக் கொடிய பசி தாகமடங்க

ஆறாக் கொடிய பசிதாக
மடங்கத் தணிய வருளளிக்கும்
மாறக் கருணை வரதன்பால்
வந்தேன் கபாடந் திறமினோ.

ஆறாக் கொடிய பசி தாகம் அடங்கத் தணிய = ஆறுதல் படுத்தமுடியாத கொடுமையான பசியும், தாகமும் அடங்கி குறைய;

அருள் அளிக்கும் = இறைவன் அருளை வழங்கும்;

மாறாக் கருணை வரதன் பால் வந்தேன் = மாறாத கருணை உடைய இறைவனை நாடி வந்திருக்கிறேன்;

கபாடம் திறமின் = உன் அன்புக் கதவைத் திறப்பாயாக கடவுளே!

கபாடந் திறமினோ!

கல்லேன் சுருதி நலம்புரியக் 
கருதேன் பாவம் கசந்திடேன்
பொல்லே னெனினும் வந்தடைந்தேன்
போகேன் கபாடந் திறமினோ.

கல்லேன் சுருதி = சுருதி என்னும் வேதத்தை படிக்கவில்லை;

நலம் புரியக் கருதேன் = நல்லது செய்ய நினைக்கவில்லை;

பாவம் கசந்திடேன் = பாபம் செய்வதை வெறுக்கவில்லை;

பொல்லேன் எனினும் = இப்படிப்பட்ட பொல்லதவன் ஆனாலும்;

வந்தடைந்தேன் = (இறைவனே) உன்னை வந்து அடைந்திருக்கிறேன்;

போகேன் = (உன்னைவிட்டு) திரும்பி போகமாட்டேன்;

கபாடம் திறமின் = கதவை திறப்பீராக கடவுளே!

திருடர் வஞ்சகர் காமிகள்

திருடர் வஞ்சகர் காமிகள் செல்வமார்
குருடர் மற்றோ ருபிமையைக் கொள்ளைகொண்
முருடர் கோபிகண் மூர்க்கர்கு தர்க்கராம்
புருடர்க் கீண்டு புகலரி தாகுமால்.

திருடர் வஞ்சகர் காமிகள் = திருடர், ஏமாற்றி தீமை செய்யும் வஞ்சகர், பேராசைக்காரர்கள்;

செல்வம் ஆர் குருடர் = செல்வம் ஆனதினால் அறிவுக் குருடு ஆனவர்கள்;

மற்றோர் உரிமையைக் கொள்ளை கொள் முருடர் = பிறரது பொருளைக் கவர்ந்து கொள்ளும் முரட்டு குணம் கொண்டவர்கள்;

கோபிகள் = கோபக்காரர்கள்;

மூர்க்கர் = கொடியவர்கள்;

குதர்க்காராம் புருடர் = விதண்டாவாதம் செய்யும் புரட்டுக்காரர்கள்;

ஈண்டு புகல் அரிதாம் = மோட்சத்தின் வாயிலில் புகுந்து போவது முடியாது; (சொர்க்கம் திறந்திருக்காது).

வெஞ்சாபக் கொழுங்கனல்

குன்று காலும்வெஞ் சாபக் கொழுங்கனல்
முன்றி னின்றுமு டுகிச்சு ரஞ்செலீஇ
வன்றொ டர்ப்படு மான்விடு பட்டெனச்
சென்று கூடினன் முன்விடு செந்நெறி.

குன்று காலும் = மலையிலிருந்து வீசும் (காலுதல்=வீசுதல்);

வெம் சாபக் கொழுங்கனல் = கொடிய சாபம் ஆகிய நெருப்பான (கனல் = தீ);

முன்றில் நின்று முடுகிச் சுரம் செலீஇ = இடத்திலிருந்து விரைவாக காட்டுக்குள் சென்று (முன்றில் =இடம்; சுரம் = காடு;

வன்றொடர் படு மான் விடுபட்டு என = வலிமையான வலையில் அகப்பட்ட மான் அதிலிருந்து விடுபட்டத்தைப் போல; (தொடர்=வலை;

முன்விடு செம் நெறி = முன்னே விட்டுச் சென்ற வீடுபேற்றின் வழியை;
சென்று கூடினன் = சென்று அடைந்தான்.

தள்ளுண்டாலும்

"நள்ளுண் டாலுந லம்மஃ தன்றெனில்
எள்ளுண் டாலுமி ழிபுலை யன்னெனத்
தள்ளுண் டாலுந்த யாபதி சித்தமென்
றுள்ளுண் டாயவொ ரூக்கமொ டேகினான்."

நள்ளுண்டாலும் நலம் = நல்லதற்காக விரும்பப்பட்டாலும்;
அஃதென்றனில் = அது இல்லாவிட்டாலும்;
எள்ளுண்டாலும் = இகழப்பட்டாலும்;
இழிபுலையன் என தள்ளுண்டாலும் = இழிவான தொழில்புரிவோன் என்று என்னைத் தள்ளிவிட்டாலும்;
தயாபதி சித்தம் என்று = தலைவனின் (இறைவனின்) விருப்பம் அதுதான் என்று நினைத்து;
உள் உண்டாய ஓர் ஊக்கமொடு = உள்ளத்தில் உண்டாகிய ஒரு துணிவுடன்;
ஏகினேன் = சென்றேன்;

பிரகஸ்பதி

பிரகஸ்பதி:
பிரம்மமானச புத்திரருள் ஒருவர் அங்கிரசன். அந்த அங்கிரசனின் மகன்தான் வியாழன் என்னும் குரு என்னும் பிரகஸ்பதி. இந்த பிரகஸ்பதி தேவர்களின் குருவாம். மகா புத்திசாலியும்கூட. இந்த பிரகஸ்பதியின் மனைவி பெயர் தாரை. 

பிரகஸ்பதி மனைவியான தாரை மீது சந்திரன் ஆசைப்பட்டு அந்த பெண்ணை கடத்திக் கொண்டு போய் வாழ்ந்திருக்கிறான் இந்த சந்திரன். அவ்வாறு வாழ்ந்த காலத்தில் சந்திரனுக்கும் இந்த தாரைக்கு பிறந்தவன்தான் புதன் என்கிறார்கள். புதன் வழி வாரிசுகள்தான் சந்திரவம்ச வாரிசுகளாம். 

தாரை இருக்கும் இடத்தை அவள் கணவன் பிரகஸ்பதி கண்டுபிடித்து, அவளைக் கடத்தி வைத்திருக்கிற சந்திரனுடன் போர் புரிகிறான். பெரிய போராம். பிரகஸ்பதிக்கும் சந்திரனுக்கும் மிகப் பெரிய போர். பிரமதேவர் பஞ்சாயத்து செய்கிறார். பிரமதேவர் சந்திரனை சந்தித்து, பிரகஸ்பதி மனைவி தாரையை பிரகஸ்பதியிடமே விட்டுவிடும்படி சந்திரனைக் கேட்டுக்  கொள்கிறார். பிரமதேவர் பெரிய ஆள். அவர் சொல்லை மதித்து, சந்திரன் தாரையை விட்டுவிடுகிறான். தாரை மறுபடியும் வந்து அவள் கணவன் பிரகஸ்பதியிடம் வாழ்கிறாள். 

பிரகஸ்பதி இருக்கும் மண்டலம் பொன்மயமான மண்டலமாம். இந்த மண்டலத்தில் வேறுவகையான மனிதர்கள் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அந்த பிரகஸ்பதி மண்டலத்தில் இருக்கும் மனிதர்கள் மிகச் சிறந்த அறிவு உடையவர்களாம். பிரகஸ்பதியும் மிகுந்த அறிவாளியே. விஞ்ஞானிகளும் அவர்களின் இடைவிடாத ஆராய்ச்சியில், இந்த பிரகஸ்பதி மண்டலத்தில் அறிவுடைய மானிடர்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கருதுகிறார்களாம். இந்த பிரகஸ்பதி மண்டலம் பூமியைவிட பல மடங்கு பெரியதாக இருந்தாலும், மிக மிக லேசானதாம். அங்கு வசிப்பர்களும் லேசாகவே இருப்பார்களாம். இவர்களைத்தான் புராணங்கள் "தேவகணத்தினர்" என்று கூறியுள்ளனர். 

பரிமேலழகர்

பரிமேலழகர்:

"பாலெல்லா நல்லாவின் பாலாமோ பாரிலுள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ நூலிற்
பரித்தவுரையெல்லாம் பரிமேலழகன் 
றெரித்தவுரையாமோ தெளி."

பரிமேலழகர் காஞ்சிபுரத்துக்காரர் என்று பலர் சொல்கிறார்கள். சிலர், இவரை பாண்டிய நாட்டில் பிறந்தவர் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இவர் தமிழிலும் வடமொழியிலும் வல்லவர்.

திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பலர். இவர்களில் சிறந்த உரையை எழுதியவர்கள் என்று கருதப்படுவர்கள் இரண்டு பேர்கள். ஒன்று, நச்சினார்க்கினியர், மற்றவர் இந்த பரிமேலழகர். 

ஒவ்வொருவரும் திருக்குறளுக்கு உரை எழுதும் போது, அவரவர் சார்ந்த மதத்தைக் கொண்டே அதன் கருத்துக்களை சொல்லியுள்ளனராம். நச்சினிக்கினியனார் எழுதிய உரையில் திருக்குறள் ஒரு பொதுநூல் என்றே கருதி உரை எழுதியுள்ளாராம். 

பரிமேலழகர் தியானத்தில் இருந்து, திருக்குறளின் உண்மைப் பொருளைத் தியானத்தில் கண்டு, அதற்கு உரை எழுதியதாகச் சொல்கிறார்கள். எனவே இவரின் உரையில் பொருள் வன்மையும், செஞ்சொற்சிறப்பும், இலக்கணத்தைக் கூறும் சாதுரியமும், சிறப்பான உரை தெரிவிக்கும் ஆற்றலும், மேற்கோள்களை எடுத்து சித்தாந்தம் செய்யும் வகையும், வடமொழிச் சொற்களை செம்மொழியாக்கும் அற்புத சாமர்த்தியமும், முத்தமிழ் பரப்பெல்லாம் முற்றுணர்ந்த நுண்புலமையும் நன்கு விளங்குமாம்.

Friday, August 14, 2015

தேவாரம்

தேவாரம்
தேவர்களின் ஆரம். தேவர்களுக்கு சாத்தும் மலர் மாலை. சொல் மாலை இது.
அப்பர், சம்மந்தர், சுந்தரர் ஆகிய மூவர்களின் பாடல் தொகுப்பு இது. இவைகள் மொத்தம் தொண்ணூற்றாறாயிரம் பதிகம் கொண்டவை. இவற்றில் பல அழிந்துவிட்டனவாம். மீதி இருப்பவை எழுநூற்றுத் தொண்ணூற்றைந்து. மன்னர்களுக்குள் போர் ஏற்பட்டபோது, அவைகளில் சிக்கி தீயில் கருதி அழித்துவிட்டனவாம். 

அபயர்குலசேகர சோழன் என்ற மன்னர் இருந்தார். அவர் ஒருமுறை, ஒரு புலவர் பாடிய பாட்டைக் கேட்கிறார். மிக இனிமையாக இருக்கிறதே இந்த பாடல் என்று ஆச்சரியப்படுகிறார். அப்போது அந்தப் புலவர் சொல்கிறார். இது தேவராப் பாடல்களில் ஒன்று என்று கூறுகிறார். இவ்வாறான பிற பாடல்கள் எங்கு கிடைக்கும் என்று தேடி அலைகிறார். கிடைக்கவில்லை. பின்னர் நம்பியாண்டார நம்பி என்பவரிடம் சென்று 795 பதிகங்கள் மட்டும் எஞ்சி இருப்பதாக அறிந்து அவரிடமிருந்து அந்த பாடல்களைப் பெற்றுக் கொண்டாராம்.

அவைகள்தான் இப்போதுள்ள தேவாரப்பாடல்கள்.

Romeo and Juliet

ரோமியோ அண்ட் ஜூலியட் (வில்லியம் ஷேக்ஸ்பியர்)
காட்சி 2
பாரிஸ்: "கப்பிலட் சீமானே! நான் உங்களை மாமா என்று அழைக்கவா என்று கேட்டேன், பதிலே இல்லையே?

கப்பிலட்: நான் உனக்கு ஏற்கனவே சொன்ன பதிலைத்தான் திரும்பவும் சொல்கிறேன். என் மகள் 14 வயது முடியாத சிறு பெண். இந்த உலகத்தில் சூட்சமங்களை தானே அறிந்து கொள்ள முடியாத வயது என் புதல்விக்கு. இன்னும் இரண்டு வருடங்கள் செல்லட்டும், பார்க்கலாம்.

பாரிஸ்: உங்கள் மகளுக்கு இளையவர்கள் எல்லாம் பிள்ளை பெற்று தாயாக வாழ்கிறார்களே?

கப்பிலட்: ஆனால், அவர்கள் அவலத்துக்கு உள்ளாகி அவதிப் படுகின்றனர்; நான் பெற்ற மகள்தான் எனக்கு இந்த உலகத்தில் உள்ள ஒரே நம்பிக்கை. ஆனாலும், நீ, என் மகளிடம் பேசி அவள் மனதில் இடம்பிடி. எனது சம்மதம் பாதிதான். அவளின் சம்மதமே முக்கியம்.

இன்று இரவு என் மாளிகையில் எங்களின் பரம்பரை பரம்பரையாக நடைபெறும் விருந்து நிகழ்ச்சி இருக்கிறது. அந்த விருந்துக்கு நீயும் வர வேண்டும். எனக்கு வேண்டியவர்கள் பலபேர் அங்கு வருவார்கள். அவர்கள் அனைவரும் என் மாளிகையில் கூடி, வானத்தை இருள் மூடிவிடுவதுபோல, இளைஞர்கள் சூழ்ந்து சொரக்கமாக்கி விடுவார்கள். அந்த கூட்டத்தில் நீயும் கலந்து உனக்கு விரும்பிய மங்கையை தேர்ந்தெடு. வா, போகலாம்.
வேலைக்காரனே இங்கே வா, இந்தப் பட்டியலில் இருப்பர்களை விருந்து அழைத்து வா.

(அங்கு பென்வோலியோவும், ரோமியோவும் வருகிறார்கள்)
பென்வோலியோ: பாவம் இந்த படிக்காத வேலைக்காரன். அந்த பெயர் பட்டியலில் உன் காதலி ரோசலின் பெயரும் இருக்குமோ? அந்த நகரமே அதிரும் விருந்து அது.

ரோமியோ: ரோசலினா? உனக்கு எப்படித் தெரியும்.

பென்வோலியோ: போடா, உனக்கு விருப்பமானவள் அவள்தான் என்று எனக்குத் தெரியும். அந்த விருந்துக்குப் போய், அங்கு வந்திருக்கும் அழகு தேவதைகளைப் போய் பார், பேசிப்பார், அப்போது தெரியும் நீ அன்னப்பறவை என்று நினைக்கும் உன் காதலி ஒரு காக்காய் என்று.

ரோமியோ: போடா, என் காதலிக்கு எதிரான வேறு பெண்ணை இதுவரை நான் கண்டதில்லை.

பெனவோலியோ: போடா, ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வேறு ஒருத்தி பக்கத்தில் நிற்க வேண்டுமே? நீ நிதானம் இழந்துவிட்டாய். அந்த விருந்துக்கு வா. அங்கு உனக்கு நான் ஒரு பெண்ணைக் காட்டுகிறேன். அவள் பக்கத்தில் வைத்து உன் காதலியை நீ எடை போட்டுப் பார்.அப்போது புரியும் உனக்கு எல்லா உண்மையும்.

ரோமியோ: விருந்துக்கு வருகிறேன். அப்போது பார்க்கலாம் உன் வாய்ப்பேச்சை.
**

Scene II 
(Capulet, County Paris, and Servant the Clown)

Capulet: But Montague is bound as well as I,
In penalty alike, and 'tis not hard, I think,
For men so old as we to keep the peace.

Paris:Of honourable reckoning are your both,
And pity 'tis you liv'd at odds so long.
But now, my lord, what say you to my suit?

Capulet: But saying o'er what i have said before:
My child is yet a stranger in the world,
She hath not seen the change of fourteen years;
Let two more summers wither in their pride
Ere we may think her ripe to be a brid.

Paris: Younger than she are happ mothers made.

Capulet: And too soon marr'd are those so early made.
The earth hath swallowed all my hopes but she;
She is the hopeful lady of my earth.
But woo her, gentle Paris, get her heart;
My will to her consent is but a part.
And she agree, within her scope of choice
Lies my consent and fair according voice.
This might I hold an old accustom'd feast,
Whereto I have invited many a guest,
Such as I love; and you among the store,
One more, most welcom, makes my number more.
At my poor house look to behold this night
Earth-treading stars that make dark heaven light.
Such comfort as do lusty young men feel
When wll apparell'd April on the heel
Of limping Winter treads, even such delight
Among fresh female buds shall you this night
Inherit at my house. Hear all, all see,
And like her most whose merit most shall be;
Which, on more view of many, mine, being one,
May stand in number, though in reck'ning none.
Come, go with me. 
(To Servant, giving him a paper):
Go, sirrah, trudge about
Through fair Vereona; find those persons out
Whose names are written there, and to them say,
My house and welcome on their pleasure stay.

Servant: Find them out whose names are written here? It is written that the shoemaker should meddle with his yard and the tailor with his last, the fisher with his pencil and thepainter with his nets; but I am sent to find those persons whose names are here writ, and cna never find what names the writing person hath here writ. I must to the learned. In good time!

(Enter Benvolio and Romeo)
Benvolio: Tut, man, one fire burns out another burning;
One pain is lessoned by another's anguish;
Turn giddy, and be holp by backward turning;
One desperate grief cures with another's languish.
Take thou some new infection to thy eye
And the rank poison of theold will die.

Romeo: Your plantain leaf is excellent for that.

Benvolio: For what, I pray thee?

Romeo: For your broken shin.

Benvolio: Why, Romeo, art thou mad?

Romeo: Not mad, but bound more than a madman is;
Shut up in Prison, kept without my food,
Whipp'd and tormented and- God-den, good fellow.

Servant: God gi'go-den. I pray, sir, can you read?

Romeo: Any, mine own fortune in my misery.

Servant: Perhaps you have learned it without book. But I pray, can you read anything you see?

Romeo: Ay, If I know the letters and the language.

Servant: Ye say honestly. Rest you merry!

Romeo: Stay, fellow; I can read, 
He reads:
         "Signior Martino and his wife and daughters;
County Anselmo and his beauteous sisters;
The lady widow of Vitruvio:
Signior Placentio and His lovely nieces;
Mercutio and his brother Valentine;
Mine uncle Capulet his wife, and daughters;
My fair niece Rosaline and Livia;
Signior Valentio and His cousin Tybalt;
Lucio and the lively Helena."
(Gives back the paper)
A fair assembly. Whither should they come?
Servant: Up.

Romeo: Wither?
Servant: To supper, to our house.
Romeo: Whose house?
Servant: My master's.
Romeo: Indeed I should have ask'd you that before.
Servant: Now I''ll tell you without asking. 
My master is the great rich Capulet; and if you be not of the house of Montagues, I pray come and crush a cup of wine. Rest you merry! Exit.

Benvolio: At this same ancient feast of Capulet's
Sups the fair Rosaline whom thou so lov'st;
With all the admired beauties of Vereona.
Go thither, and with unattained eye
Compare her face with some that I shall show,
And I will make thee think they swan a crow.

Romeo: When the devout religion of mine eye
Maintains such falsehood, then turn tears to fires:
And these, who, often drwn'd, could never die,
Transparetn hertics, be burnt for liars!
One fairer than my love? The all-seeing sun
Ne'er saw her match since first the world begun.

Benvolio: Tut! you saw her fair, none else being by,
Herself pois'd with herself in either eye;
But in that crystal scales let there be weigh'd
Your lady's love against some other maid
That I will show you shining at this feast,
And she shall scant show well that now seems best.

Romeo: I'll go along, no such sight to be shown,
But to rejoice in splendour of my own.
**

Verona

Verona
வடக்கு இத்தாலியில் உள்ள நகரம்தான் இந்த வெரோனா நகரம். 

ஷேக்ஸ்பியர் எழுதிய காவிய நாடகங்களில் மூன்றில் இந்த நகரில் நடந்ததாக குறிப்பிடுகிறார். ரோமியோ ஜூலியட், வெரோனாவின் இரண்டு ஜென்டில்மென், டேமிங் ஆப் ஷ்ரூ ஆகியவைகள்தான் இந்த மூன்று காவியங்கள். 

அந்த அளவுக்கு பேரும் புகழும் வாய்ந்த இத்தாலிய நகரம் இது. அடிஷ் என்ற நதியின் கரையில் உள்ள நகரம் இந்த வெரோனா. 

இந்த நகரை புராதன நகர் என்ற உலக புராதன சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.

Thursday, August 13, 2015

தேவரதா Devavrata

தேவரதா Devavrata
தேவதை கங்கா. இப்போது மனித உருவில் நிற்கிறாள். அவளுக்கு முன்னர் சந்தனு மன்னர் நிற்கிறார். தேவதை கங்கா இப்போது அழகிய மானிட உருவில் பெண்ணாக நிற்கிறாள். மன்னர் சந்தனு, அவள் அழகில் மயங்கி நிற்கிறார். விதி தனது வேலையைச் செய்து கொண்டிருக்கிறதாம்.

கங்காதேவி: "மன்னரே! நான் உங்களின் மனைவியாகிறேன், ஆக முடியும், ஆனால் சில நிபந்தனைகள் உண்டே!"

மன்னர்: '???"

கங்காதேவி: "மன்னரே, நான் யாரென்று இப்போதும் கேட்கக்கூடாது, இனி எப்போதும் கேட்கக்கூடாது. எங்கிருந்து வருகிறேன் என்றும் கேட்கக்கூடாது. நான் என்ன செய்தாலும் ஏன் என்று கேட்கவோ தடுக்கவோ கூடாது. நான் நல்லது செய்தாலும், கெட்டதைச் செய்தாலும் ஏன் என்று கேட்கக்கூடாது. என்னை எந்தக் காரணத்தைக் கொண்டும் மனம் நோகும்படி நடந்து கொள்ளக் கூடாது. இதற்கு மாறாக நீங்கள் நடந்து கொண்டால், அப்போதே சொல்லாமல் உங்களிடமிருந்து நான் சென்று விடுவேன். இதற்கு நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? அவ்வாறு ஒப்புக் கொண்டால் நான் உங்களுக்கு மனைவியாக சம்மதிக்கிறேன்."

(இதைத்தானே இப்போதும் எல்லா மனைவிகளும் எதிர்பார்க்கின்றனர். செயல்படுத்தவும் செய்கின்றனர்.)

அழகின் போதையில் இருந்த மன்னர் சந்தனு இதற்கு ஒப்புக் கொண்டு சத்தியமே செய்து தருகிறார். இவளை மனைவியாக அடையவேண்டும், அடைவேன் என்று மனம் உறுதி செய்து கொண்டார். (மன்னராக இருந்தாலும், இந்த மாதிரி விவகாரங்களில் எல்லோருக்கும் மனம் என்பது ஒன்றாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும்.)

அரண்மனைக்கு அவளை கூப்பிட்டுக் கொண்டு வருகிறார். ஆசைப்பட்டது போலவே, அவளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார். பிள்ளைகளும் பிறக்கிறது.
முதல் பிரசவம்...... குழந்தை பிறந்துவிட்டது. அந்த சிசுவை எடுத்துக் கொண்டு கங்கைக்கு செல்கிறாள். நதியில் இறங்கி, அந்த குழந்தையை தண்ணீரில் விடுகிறாள். குழந்தை மூழ்கி மறைகிறது. அரண்மனைக்கு திரும்புகிறாள். 

கொஞ்சநாள் கழித்து..... மறுபடியும் கர்ப்பம்.... மறுபடியும் பிரசவம்..... மறுபடியும் கங்கைக்கு போகிறாள்...... அந்தக் குழந்தையையும் கங்கையில் விடுகிறாள்.....அரண்மனை திரும்புகிறாள்.....

இப்படியாக ஏழு குழந்தைகளை கங்கையில் விட்டுவிட்டாள். இவள் என்ன பைத்தியமா? ஏன் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்? ஏன் அதை கங்கையில் மூழ்கடிக்க வேண்டும்? 

மன்னர் சந்தனுவுக்கு பயங்கர கோபம். இதுவரை பொறுமையாக இருந்தார். அமைதியாக இருந்தார். கொடுத்த வாக்குறுதி பொய்யாகக் கூடாதே என்று வாய்மூடி மௌனியாக இருந்தார்... இனிமேலும் பொறுத்திருக்க முடியாது. இவள் ஒரு பேயாகத்தான் இருக்க வேண்டும். பெற்ற குழந்தையை எவளேனும் தண்ணீரில் எறிவாளா? காரணமும் சொல்லமாட்டாளாம். கேட்கவும் கூடாதாம். அநியாயம். 

இதுவரை ஏழு குழந்தைகளை கங்கைநீரில் விட்டுவிட்டாள். எட்டாவது குழந்தை பிறக்கிறது. அதையும் அவ்வாறே கங்கைக்கு கொண்டு செல்கிறாள். மன்னர் சந்தனுவும் பின்தொடர்கிறார். கரையிலிருந்து குழந்தையுடன் கங்கைக்குள் இறங்கிவிட்டாள். அப்போது அங்கு வந்த மன்னர் சந்தனு, அவளைத் தடுத்து நிறுத்தி, ஏன் இப்படிச் செய்கிறாள். உனக்கு இரக்கம் இல்லையா? காரணத்தைச் சொல் என அதிகாரத்துடன் கேட்கிறார். 

அவளுக்கு கோபம். "நீர் என்னை எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையின்படிதான் நான் உங்களுக்கு மனைவி ஆனேன். அந்த உறுதிமொழியை நீங்கள் மீறிவிட்டார்கள். இனி நான் உங்கள் மனைவி இல்லை" என்று கூறிவிட்டு, நான் ஏன் இவ்வாறு செய்கிறேன் என்ற காரணத்தையும் கூறுகிறாள்.

"வசிஷ்டர் என்ற முனிவரின் சாபத்தால் இந்த குழந்தைகள் எல்லாம் எனக்குப் பிறந்தன. அவை பிறந்து சில மணி நேரங்களே இவ்வுலகில் வாழும். பின்னர் அவை இறக்க வேண்டும் என்பது சாபம். இந்த எட்டுப்பேரும் வசுக்கள் (தேவ உலகத்தினர்). நான் கங்கை என்னும் தேவதை. என்மூலம் இவர்கள் பிறக்க வேண்டும் என்பதும் விதி. ஏழு வசுக்களும் அவர்களின் ஆயுட்காலத்தை இந்த எட்டாவது வசுவான, நமது எட்டாவது குழந்தைக்கு கொடுத்துள்ளனர். எனவே இந்த எட்டாவது குழந்தையை நான் அவ்வாறு கொல்ல மாட்டேன். அவனை நானே எடுத்துச் சென்று வளர்த்து உரிய வயது வந்தவுடன் அவன் உங்களைத் தேடி வருவான்" என்று கூறுகிறாள்.  அந்த எட்டாவது குழந்தையுடன் கங்கை நீருக்குள் மூழ்கி மறைகிறாள்.

இந்த வசுக்கள் ஒருமுறை இந்த பூமிக்கு வருகின்றன. அங்கு ஒரு காட்டில், வசிஷ்டர் என்ற முனிவர் தவத்தில் இருக்கிறார். அவரின் பசுமாடு மேய்ந்து கொண்டிருக்கிறது. பசு என்று சொல்லக்கூடாது. அதன் பெயர்  நந்தினி. அதைப் பார்த்த தேவ உலக வசுக்கள் அந்த பசுவின் மீது ஆசைகொண்டு அதை திருடிச் செல்ல நினைக்கின்றன. அவ்வாறு திருடியும் சென்று விட்டன. முனிவருக்கு முதலில் இது தெரியாது. பசுவைத் தேடி அழைந்து, பின்னர் தன் தவ வலிமையால் அது வசுக்களால் திருடிச் செல்லப்பட்டது என்பதை உணர்கிறார். வசுக்களுக்கு சாபமிடுகிறார். எட்டு வசுக்களும் இந்த பூமியில் பிறந்து எல்லா துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று சாபமிடுகிறார். அதை தெரிந்து கொண்ட வசுக்கள், பூமிக்கு வந்து வசிஷ்டரை வணங்கி மன்னித்துக் கொள்ளும்படி கேட்கிறார்கள். ஒருமுறை சாபம் கொடுத்தால் அதைத் திரும்ப பெற முடியாது. ஆனால் அதன் வேகத்தை குறைக்கலாம் அல்லது அதில் சிறு மாற்றம் செய்யலாம். எனவே வசிஷ்டர் இந்த சாபத்தை மாற்றி அமைக்கிறார். வசுக்கள் எல்லோரும் கங்காதேவியை சந்தித்து அவர்கள் அனைவருக்கும் தாயாக இருந்து பிறப்பித்து இறப்பை கொடுக்கும்படி வேண்டுகிறார்கள். கங்காதேவியும் சம்மதிக்கிறாள்.

அதாவது, எட்டுப்பேரில் ஏழுபேர் பிறந்தவுடன் இறந்து விடுங்கள், எட்டாவதாக பிறப்பவர் அந்த ஏழுபேரின் ஆயுளையும் சேர்த்து இந்த பூமியில் இருந்து அனுபவிக்க வேண்டும். வசுக்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

கங்காதேவியிடம் பிறந்து, இறந்து, எட்டாவது பிறந்தவரை, தாய் கங்காதேவி வளர்ந்து வாலிபனாக மன்னர் சந்தனுவிடம் அனுப்பி வைக்கிறார். 

"மன்னரே, இதோ உங்களின் மகன் தேவதத்தா; உங்களின் எட்டாவது மகன் இவன்தான். இவன் வேதங்களை படித்து விட்டான். வசிஷ்டர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். எல்லா வில் வித்தைகளையும் கற்றுக் கொண்டுவிட்டான், அவைகளை சுக்கிராச்சாரியார் சொல்லிக் கொடுத்து விட்டார். எல்லா கலைகளையும் கற்றுவிட்ட இவனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்று கூறி தேவரதாவை மன்னர் சந்தனுவிடம் ஒப்படைத்து விட்டு மறைந்து விட்டாள் கங்காதேவி.

இவர்தான் பீஷ்மர். 
மகாபாரதத்தில், பீஷ்மர் வெகுகாலம் உயிருடன் இருக்கிறார். இவரை எந்த மனிதனும் கொல்ல முடியாது. ஒரு ஆணோ, அல்லது ஒரு பெண்ணோ இவரைக் கொல்ல முடியாது.


பனுவலேகிளவி நூலாம்...

தனம் = முலை, பொன், பசுவின்கன்று, சந்தனம், பசு.
கனவு = நித்திரை, மயக்கம்.
கலிங்கம் = வானம்பாடி, சீலை (புடைவை).
கனை = நெருக்கம், ஓசை.
கவரி == சாமரம், எருமை.
பனுவல் = சொல், நூல்,
பட்டபை = ஊர்ப்புறம், தோட்டம்.

"தனமுலைபொன்னான் கன்று சந்தமுத்தனமைம் பேராம்
கனவு நித்திரைமையற்பேர் கலிங்கஞ்சாதகப்புள்ளாடை
கனைசெறிவொலியாமென்ப கவரியே சவரிமேதி
பனுவலேகிளவி நூலாம் படப்பையூர்ப் புறமே தோட்டம்."

கானலே மலைச்சார் சோலை...

சானகி = சீதை, மூங்கில்.
தனு = உடம்பு, வில், அற்பம்.
சானு = மலை, முழந்தாள், மலைச்சாரல்.
சோனை = திருவோண நட்சத்திரம், விடாமழை.
கானல் = மலைச்சாரலிற் சோலை, கடற்கரையிற்சோலை, பேய்த்தேர்.

"சானகிசீதை மூங்கிறனுவென்ப துடல்வில்லற்பம்
சானுவேமலைமுழந்தாண்மலைப்பக்கத்தானுமாகும்
சோனையே யாணநாளும்விடாமழை சொரிதலும்பேர்
கானலே மலைச்சார் சோலை கடற்கரைச் சோலை பேய்த்தேர்."

அனந்தனே சிவன்....

அனந்தனே சிவன்....

அனந்தன் = சிவன், திருமால், சேடன், பலபத்திரன், அருகன்.
அனந்தம் = அளவின்மை, பொன், ஆகாயம்.
அனங்கம் = இருவாட்சி, மல்லிகை.
தனஞ்செயன் = அருச்சுனன், நெருப்பு, தச வாயுக்களுள் ஒன்று.

"அனந்தனேசிவன் மால் சேடன லாயுதனருகனைந்தே
அனந்தமே முடிவிலா மையாடகம் விண்முப்பேரே
அனங்கமேயிருவாட்சிப் பேராகுமல்லிகைக்குமப்பேர்
தனஞ்செயன் பார்த்தனே செந்தழலொரு காற்றுமாமே."

முனியென்ப....

முனியென்ப....

முனி = யானைக்கன்று, முனிவன், வில், அகத்தி.
துனி = புலவிநீட்டம், துன்பம், வியாதி, நதி, கோபம்.
பனி = நடுக்கம், துன்பம், அச்சம், குளிர்ச்சி, பனி.
சினை = முட்டை, கருப்பம், மரக்கொம்பு.

"முனியென்ப யானைக் கன்று முனிவன் வல்லகத்தி நாற்பேர்
துனியென்ப புலவி நீட்டந் துன்ப நோயாறு கோபம்
பனியென்ப நடுக்கந் துன்பம் பயங்குளிரிம்மைம்பேரே
சினையென்ப முட்டை பீளாமரக் கொம்புஞ் செப்புமப்பேர்."

சாத்வீகச் செயல்கள்

சாத்வீகச் செயல்கள்
ஞானம், தவம், மெய்ம்மை, மேன்மை, அருளுடைமை, ஐம்புலனடக்கல்.

இராட்சத செயல்கள்;
தானம், தவம், மெய்மை, தருமம் பேணல், ஞானம், கல்வி, கேள்வி.

தாமதச் செயல்கள்
பேருண்டி
ஒடுங்கல்
சோம்பு
மூரி
காமம்
நீதிகேடு
நித்திரை
மறதி
தணியாக்கோபம்
வஞ்சம்

தானங்கள்

தானங்கள்
மூன்று வகை தானங்கள்:
உத்தமதானம், மத்திம தானம், அதமதானம்.

உத்தமதானம் = தருமவழியால் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் பொருளை, மனதை அடக்கி தவம் செய்பவரிடம் சென்று பெற்றுக் கொள்க என்று வேண்டி தாழ்ந்து கொடுத்து மகிழ்வது.

மத்திமதானம் = அங்கம் குறை உடையவர்களுக்கும், பெண்களுக்கும், செவிடர்களுக்கும், வறியவர்களுக்கும் கொடுத்து உதவுவது.

அதமதானம் = அன்பு, புகழ், கண்ணோட்டம், அச்சம், கைம்மாறு, பிறிதுகாரணம் இவைகளுக்காக கொடுத்தல். 

ஆசுகவி

நான்கு வகை புலவர்கள்
கவி, கமகன், வாதி, வாக்கி என நான்கு வகை புலவர்கள் உண்டு.

கவி = ஆசு கவி, மதுர கவி, சித்திர கவி, வித்தார கவி என்ற நான்கு வகை கவிகளையும் மிகச் சிறப்பாக கவி பாடுபவர்.

கமகன் = அரும் பொருட்களை செம் பொருளாக காட்டி விவரிக்கும் புலவர்.

வாதி = ஏதாவது மேற்கோளை எடுத்துக் காட்டி வாதித்து பிறரின் கொள்கையை மறுக்கும் புலவர்.

வாக்கி = அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளையும் யாவரும் விரும்பி கேட்குமாறு எந்த குற்றமும் இல்லாமல் கூறும் புலவர்.

ஆசுகவி = சபையிலே, திடீரென்று கொடுக்கப்பட்ட ஒரு பொருளைப் பற்றி பாட்டு, அடி முதலிய அமைத்து உடனே பாடல் புலவர்.

மதுரகவி = பொருள் சிறப்பும், சொற்சிறப்பும், தொடையும், உருவகமும் முதலிய அலங்காரங்களும், ஓசையும் தோன்றும்படி பாடல் பாடும் புலவர்.

சித்திரகவி = மாலைமாற்று, சுழிகுளம், ஏகபாதம், சக்கரவகை ஏழுகூற்றிருக்கை, பாதமயக்கு, பாவின்புணர்ப்பு, ஒற்றெழுத்து இல்லாப்பாட்டு, ஒரு பொருள்பாட்டு, சித்திரப்பா, விசித்திரப்பா, வினாவுதரம், ஓரெழுத்துப்பாட்டு, ஓரினப்பாட்டு, காதைகரப்பு, கரந்துறைப்பாட்டு, கோமூத்தரி, கூடசதுர்த்தம், சருப்பதோபத்திரம், என்பவற்றையும், எழுத்தும் எழுத்தின் வர்க்கமும், உதாரணமும் நோக்கிப் பாடும்படி வடநூல்களில் வைத்த இறைக்கவிகளும், பிறவும் பாடும் புலவர்.

வித்தாரகவி = மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மடலூர்தல், மறம், கலிவெண்பா, பாசண்டத்துறை, இயல் இசை நாடகம் ஆகியவற்றை விரித்து பாடும் புலவர்கள்.


சூத்திரங்கள்

சூத்திரங்கள்
சூத்திரங்கள் மொத்தம் 18.
சுபம், அசுபம் முதலிய காரியங்களை செய்வது குறித்த விதிகளைக் கூறுவது இந்த சூத்திரங்கள்.
இந்த 18 சூத்திரங்கள்;
போதாயனம்
ஆபஸ்தம்பம்
சத்தியாஷாடம்
திராஹியாயனம்
அகஸ்தியம்
 சாகல்லியம்
ஆசுவலாயனம்
சாம்பவீயம்
காத்தியாயனம்
 வைகானசம்
 சௌனகீயம்
 பாரத்துவாசம்
 அக்கினவைசியம்
 ஜைமினீயம்
 வாதூலம்
 மாத்தியந்தினம்
 கௌண்டின்னியம்
 கௌஷதகம்
 ஹிரணியகேசி.

சூதர்

சூதர்
இவர்களை "வந்தியர்" என்றும் "சூதர்" என்றும் தமிழில் அழைக்கின்றனர். 
வியாசரின் சீடர்களில் ஒருவரான சூதர் என்னும் ரிஷி, நைமிசாரணிய வனத்தில் இருந்த முனிவர்களுக்கு எல்லாப் புராணங்களையும் உபதேசித்தாராம். 

அவரின் வழி வந்தவர்கள் சூதமாகதர் என்று அழைக்கப் படுகின்றனர். இந்த சூதமாகதர்கள், அரசர்களுடன் இருப்பார்களாம். அரசர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காக, இந்த புராணங்களையும் அதில் உள்ள கதைகளையும் பாடல்களாகப் பாடி மகிழ்விப்பார்களாம். 

சிவஞானபோதம்

சிவஞானபோதம்:
தமிழ்ச் சைவ சித்தாந்த சாஸ்திரம் பதினான்கிற்கும் முதல் நூல் இந்த சிவஞானபோதம் தான். 

இதை வடமொழியில் இயற்றியவர் நந்திபகவான்; 
இதை தமிழிலே இயற்றியவர் மெய்கண்ட தேவர்;

இந்த நூல் 12 சூத்திரங்களை உடையது. இதற்கு விளக்கமும் உரையும் செய்தவர் சிவஞான முனிவர். வடமொழியில் சிவாக்கிய முனிவர் செய்த பாஷியத்தை, சிவஞான முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார்.

சத்தியபாமை

சத்தியபாமை:
யாதவர் குலத்தில் ஒரு வம்சம் "விருஷ்ணி வம்சம்". இந்த வம்சத்தை சேர்ந்த மன்னன் பெயர் சத்திரஜித்து. 
இந்த மன்னன் சத்திரஜித்துவின் மகள்தான் "சத்தியபாமை."
இந்த சத்தியபாமைதான் ஸ்ரீகிருஷ்ணனின் பிரியநாயகி.
இவளுக்காகத்தான், கிருஷ்ணன், தேவ லோகத்தில் இருந்த பாரிஜாத மரத்தையே அங்கிருந்து பெயர்த்துக் கொண்டு வந்து இந்த சத்தியபாமையிடம் கொடுத்தானாம். 

இதை உவமையாக வைத்துத்தான், கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டால், காதலன் மாமலையையே கையில் கொண்டு வருவான் என்று சொல்லி கொண்டார்கள் போலும்.
கடவுள்கள் செய்ததைதான் மனிதன் தொடருகிறான் போல.

Wednesday, August 12, 2015

நாடி கிரந்தம்

நாடி கிரந்தம்:
மொத்தம் 15 நாடி கிரந்தங்கள் உள்ளனவாம்.

1. சூரியநாடி,
2. சந்திர நாடி
3. குச நாடி
4. புதன் நாடி
5. சுக்கிரன் நாடி
6. குரு நாடி
7. சாமி நாடி
8. ராகு நாடி
9. கேது நாடி
10. சர்வசங்கிர நாடி
11. பாவ நாடி
12. சுக நாடி
13. துருவ நாடி
14. சாவ நாடி
15. தேவி நாடி

இந்த நாடிகளில்தான் இந்த உலகத்தில் பிறந்தவர்கள், பிறக்கப் போகிறவர்கள் இவர்களின் ஜாதங்களையும், அவர்களுக்கு உண்டான பலன்களையும் சொல்லி சென்றுள்ளனராம்.

நாரி தீர்த்தங்கள்

நாரி தீர்த்தங்கள்;
தென்இந்தியாவில் இந்த நாரி தீர்த்தங்கள் உள்ளனவாம்.
இந்த ஐந்து தீர்த்தங்களின் பெயர்களும் --
1. சௌபத்திரம்,
2. பௌலோமம்,
3. காரண்டவம்,
4. பிரசன்னம்,
5. பாரத்துவாஜம்.

இந்த ஐந்து தீர்த்தங்களிலும் ஐந்து அப்சர பெண்கள் உள்ளனராம். அவர்கள் --
1.நந்தை,
2. சௌரபேயி,
3. சமீசி,
4. வசை,
5. லதை.

ஒரு ரிஷி தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் முதலையாக ஆனார். அந்த முதலையானது இந்த தீர்த்தங்களில்தான் இருந்ததாம். அது இந்த தீர்த்தங்களில் நீராட வருபவர்களை பிடித்துக் கொள்ளமாம். 

இப்படி இருந்தபோது, பாண்டவர்களில் ஒருவனான அர்சுனன் தென் இந்தியாவில் அதாவது தமிழகத்தில் குறிப்பாக பாண்டிய மன்னனின் நாட்டில் தீர்த்த யாத்திரை வந்ததாகவும், அப்போது இந்த தீர்த்தங்களில் நீராடியபோது, அந்த முதலையானது அர்ச்சுனனை காலைப் பிடித்துக் கொண்டதாகவும், அப்போதே அந்த முதலை ரிஷியின் சாபம் நீங்கி, மறுபடியும் ரிஷியாக மாறிவிட்டாராம். 

இந்தத்  தீர்த்தங்கள் எல்லாம் தமிழகத்தில் தற்போது எங்கே உள்ளனவோ தெரியவில்லை.

பரதவருஷம்

பரதவருஷம் என்றால் பரதகண்டம் என்றே பொருள்.

இது நான்கு கண்டங்களைக் கொண்டது. விதேகம், ரேபதம், மத்தியம், பரதம் என நான்கு கண்டங்களை உள்ளடக்கியதாம்.

விதேகம் என்ற பகுதி இமயத்துக்கு மேலே உள்ள பகுதிகள்.

ரேபதம் என்ற பகுதி இமயத்துக்கு கீழே உள்ள பகுதிகள்.

மத்தியம் என்பது இமயத்துக்கும் விந்தியத்துக்கும் நடுவில் உள்ள பகுதிகள்.

பரதம் என்பது விந்தியத்துக்கு தெற்கே உள்ள பகுதியாகும்.

ஆக இந்த நான்கும் சேர்ந்தே பரதகாண்டம் அல்லது பரதவருஷம் என்று பெயராம்.

Tuesday, August 4, 2015

ஆன்மா

ஆன்மா
ஆன்மா ஒரு பொருள் அல்ல. மற்ற பொருள்களைப்போல இதை கண்ணால் காண முடியாது. இது உடலில் இருக்கும்போது உடல் இயங்குகிறது. இது இல்லையென்றால் உடல் இயக்கம் நின்று பிரேதமாகிறது. இதை வைத்துப் பார்த்தால், இதுவரை உடலில் இயங்கிய சக்தி ஒன்று உடலை விட்டுப் பிரிந்து விட்டது என்பது மட்டும் புலனாகிறது. இதுதான் இதுவரை உடலை இயக்கி வந்தது. அதனால்தான் இந்த உடல் இயங்கி வந்தது. 

ஒரு இயந்திரம் இயங்குவதற்கு ஏதோ ஒரு சக்தி தேவைப்படுகிறது. அதுபோல இந்த உடல் இயங்க ஏதோவொரு சக்தி தேவைப்படுகிறது. அப்படியென்றால், இயந்திர சக்திக்கும் இந்த உடலை இயக்கும் சக்திக்கும் ஏதேனும் அடிப்படை வேறுபாடு உள்ளதா? இந்த உடல் தோன்றுவதற்குமுன், அது எங்கிருந்திருக்கும்? இந்த உடல் அழிந்தபின், அது எங்கு போயிருக்கும்? சாதாரணமான கேள்விகள்தான். பதில்கள் இன்னும் கிடைக்கவில்லை.

சிலர் இதை ஆன்மா என்கிறார்கள். சிலர் அந்த பெயரில் அதை ஒப்புக் கொள்வதில்லை. ஆன்மாவை ஒப்புக் கொள்பவர்கள் சைவசித்தாந்திகள்.
இந்த ஆன்மா கொள்கைப்படி, "நான்" வேறு, என் உடல் வேறு என்ற கொள்கையை எடுத்துக் கொள்கின்றனர். இந்த உடலுக்குச் சொந்தக்காரன் எவனோ அவனே "நான்" அல்லது அந்த நானே ஆன்மா எனலாம்.

ஆன்மா என்று ஒன்று இருந்தால், அதை யார் படைத்தார்கள் என்ற கேள்வி வருகிறதாம். அதை படைத்தவன் இறைவன் என எடுத்துக் கொள்ளலாமா எனவும் கேட்கிறார்கள். படைக்கப்பட்டது எல்லாம் அழியக் கூடியது என்றால், இந்த ஆன்மாவும் படைக்கப்பட்டதாக இருக்க முடியாது.

அடுத்த கேள்வி சற்று வேடிக்கையானது. இந்த இறைவன் ஆசையில்லாதவன் என்றால், அவன் ஏன், எதற்கு இந்த ஆன்மாவைப் படைக்கிறான். எதற்கோ படைக்கிறான் என்றால், ஏன் அந்த ஆன்மாக்களை கூன், குருடு, நோய் என்ற உடல்களில் புகுத்துகிறான். அப்படியென்றால் இறைவன் இதை படைத்திருக்க முடியாது என்று எடுத்துக் கொள்ளலாமா? அப்படியென்றால், இந்த ஆன்மாக்களுக்கு கிடைக்கும் உடல்கள் வேறுபட்டவைகளாக இருக்கின்றனவே, அது எதனால்? இந்த ஆன்மா முற்பிறவிகளில் செய்த கர்மத்துக்கு ஏற்ப அதன் அடுத்த உடல்கள் கிடைக்கின்றன என்று கருதவேண்டி உள்ளது.

ஆன்மா என்பது எங்கும் பரவியுள்ள ஒரு பொருள் என்கின்றனர். எப்போதும் உள்ளது என்றும் சித்தாய் உள்ளது என்றும் அதாவது அறிவாய் உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

ஆன்மாவுக்கு இரண்டு குணங்கள் உண்டு என்கின்றனர். ஒன்று, ஆன்மா ஒருபோதும் தனித்து இருப்பதில்லை. ஏதாவது ஒன்றை சார்ந்தே இருக்குமாம். உடலில் இருக்கும்போது அது கர்மத்தை சார்ந்து நிற்கும். அதை விட்டு முக்தி நிலை அடையும்போது இறைவனை சார்ந்து நிற்கும் என்கிறார்கள் சைவ சித்தாந்திகள். அப்படியென்றால், அறிவு குறையும்போது உடலிலும், அறிவு தெளியும் போது இறைவனிடமும் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம்.