Tuesday, August 4, 2015

ஆதி சங்கரர்

ஆதி சங்கரர்
உலகத்தில் எண்ணிக்கையில் அடங்கா உயிர்கள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் ஆன்மாக்கள் உள்ளன.  அதாவது ஒவ்வொரு உயிரிலும் ஆன்மா உள்ளது. ஆனால் இந்த அத்தனை ஆன்மாக்களும் ஒரே ஆன்மா என்று நாம் கருதுவதில்லை. 

ஆனால், ஆதிசங்கரர் கருத்துப்படி இவை அனைத்தும் ஒரே ஆன்மாதான் என்கிறார். எப்படியென்றால், நிலவு ஒன்றுதான். ஆனால் அது பூமியில் உள்ள குளம், குட்டை, கிணறு இவற்றில் இருக்கும் தண்ணீரில் ஒவ்வொன்றிலும் வேறு வேறு நிலாக்கள் தெரியும். 

அப்படியென்றால் அத்தனை நிலாக்களா உண்மையில் உள்ளன. இல்லை, ஒரே ஒரு நிலாதான் உள்ளது. அது பிரதிபலிக்கும் இடங்கள் பல, எனவே அவை பல நிலாக்களாத் தெரிகின்றன. அதுபோலத்தான் ஆன்மாவும், ஒரே ஆன்மா. அது பிரதிபலிக்கும் உடல்கள்தான் வேறு வேறு என்கிறார். 

இதுபோலத்தான் பரமாத்மா என்னும் பிரம்மம் மட்டுமே ஒரே பொருள். அது பிரதிபலிப்பது பல்வேறு உயிர்களில் என்கிறார். இன்னும் ஒரு உவமையாக, இந்த ஆன்மா என்னும் பிம்பங்கள் தெளிந்த நீரில் தெளிவாகத் தெரியும், கலங்கிய நீரில் கலங்கிய பிம்பமாகத் தெரியும். அதுபோலவே ஒவ்வொரு ஆன்மாவும் அது இருக்கும் உடலுக்கு ஏற்றவாறு அந்த ஆன்மாவின் இயல்பும் மாறிவிடுகிறது என்கிறார்.



No comments:

Post a Comment